கம்பராமாயணம் 1518 · அயோத்தியா 2.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வளம் கெழு திருநகர் - வளம் பொருந்திய அழகிய அயோத்தி நகரில்; வைகும் - பொருந்திய; பளிங்குடை நெடுஞ்சுவர் - பளிங்குக் கற்களையுடைய பெரிய சுவர்களில்; படுத்த பந்தியில் கிளர்ந்து எறிசுடர்மணி - சேர்த்தமைத்த வரிசையாய் அமைந்து மிக்கு மேலேறிப் பிரகாசிக்கின்ற ஒளிபடைத்த செம்மணிகள்; வைகலும் - நாள்தோறும்; இருளைக் கீறலால் - மாலைப் பொழுதில் மேல் எழும் இருளைப் போக்குதலால்; செக்கர்வானம் - செவ்வானமானது; (அங்கு) பிறந்தில - புதிதாகத் தோன்றவில்லை; வளர்ந்தில - வளரவும் இல்லை.
பளிங்குச் சுவரில் பதித்த செம்மணிகள் இருள் கற ஒளிர்கின்றன. செவ்வானம் போல உள்ளன. மாலையில் தோன்றி மறையும் செவ்வானம் இந்நகரில் எப்பொழுதும் ஒரு தன்மையாக இருந்தது; தோன்றவும் வளரவும் இல்லை என்றபடியாம். ‘ஏ’காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that rich and splendid city, day after day,
- the rows of brilliant gems set into its long crystal walls
- blazed up and tore away the darkness, so that
- the red sky of evening was never born and never grew.
What the poem says
The long crystal walls of Ayōtti are inlaid with rows of red gems whose glow drives away the dusk.
Because the walls give off a constant red light, the evening sky in that city never seems to begin or deepen: it is always the same glowing red.