கம்பராமாயணம் 1519 · அயோத்தியா 2.36

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாட வீதி - மாளிகைகளையுடைய தெருக்களில்; பூ மழை - மலர் மழையும்; புனல் மழை - (நீர் தெளித்தலால்) நீர் மழையும்; புதுமென் சுண்ணத்தின் தூ மழை - புதிய மென்மையான வாசனைப் பொடியின் தூய்மையான மழையும்; தரளத்தின் தோம் இல் வெண்மழை - முத்துக்கள் சிந்துதலால் குற்றமற்ற வெள்ளிய மழையும்; இழைதாம் நெரிதலின் - பொன்னணிகள் நெருங்கி நெரிகின்ற காரணத்தால்; தகர்ந்த - (ஒன்றுடன் ஒன்று மோதி) உடைந்து பிதிர்ந்து கொட்டிய; பொன் மழை - கனக மழையும் கூடி; மா மழை - பெரிய மழை பொழிவதை; நிகர்த்தன - ஒத்தன.

நகரில் உள்ளவர் நீர் தெளித்து, மலர்களையும், சுண்ணப் பொடிகளையும் தூவி, முத்துகளைச் சிந்தி வீதியை அழகுபடுத்தினர். அப்போது அவர்தம் நெருக்கத்தால் அணிந்திருந்த பொன்னணிகள் மோதிப் பிதிர்ந்து பொன்மழையும் பொழிவதாயிற்று. இவையெல்லாம் பெருமழை பொழிவது போல் ஆயிற்று என்றார். ‘ஏ’காரம் ஈற்றசை. ‘தாம்’ உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A rain of flowers, a rain of water, a pure rain
  2. of fresh, soft scented powder, a flawless white rain of pearls,
  3. a rain of gold from ornaments crushed and broken in the press:
  4. the mansion-lined streets were like a mighty downpour.

What the poem says

The citizens sprinkle water, scatter flowers and fragrant powder, and strew pearls over the streets.

The crowds are so dense that people's gold ornaments rub and break against each other, adding a rain of gold. Together it looks as though the streets lined with mansions were caught in a great storm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū maḻai, puṉal maḻai, putumeṉ cuṇṇattiṉ
tū maḻai, taraḷattiṉ tōm il veṇ maḻai,
tām iḻai neritaliṉ takarnta poṉ maḻai,
mā maḻai nikarttaṉa, māṭa vītiyē.