கம்பராமாயணம் 1521 · அயோத்தியா 2.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏய்ந்து எழு செல்வமும் - பொருந்தி மேன்மேலும் வளர்கின்ற செல்வமும்; அழகும் - இன்பமும் -; தேய்ந்தில - குறைந்திருக்கவில்லை (பொன்னகரிற் போலவே நிறைந்துள்ளன); அனையது - அத்தன்மையை ஒத்தது; தெரிந்திலாமையால் - முன்னர் அறியாதபடியால்; இம்பரில் போந்தவர் அமரர் - (இராமனது முடிசூட்டுவிழாக் காண) அயோத்திக்கு வந்தவராகிய தேவர்; போந்திலம் - இன்னும் அயோத்திக்கு வந்தோம் இல்லை; என்னும் புந்தியால் - என்கின்ற எண்ணத்தால்; பெருகவும் ஆய்ந்தனர் - மிகவும் ஆராய்ந்தனர்.
அயோத்தி பொன்னகரம் போலச் செல்வம், அழகு, இன்பங்களால் குறைவின்றி இருக்கிறது. அதனால் அயோத்திக்கு வந்த தேவர்கள் “இன்னும் அயோத்திக்கு வந்தோம் இல்லையே, நம் பொன்னகரத்தில்தானே இருக்கின்றோம்” என்று பெரிதும் ஆலோசிக்கத் தொடங்கினார்கள் என்பதால் அயோத்திக்கும் பொன்னகரத்திற்கும் வேறுபாடில்லை என்றார். 36 ஆம் பாடல் முதல் இதுவரை அயோத்திநகரை அலங்கரித்தவாறு கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wealth that came and kept on growing, beauty and delight
- were in no way less; because they could not tell the difference,
- the gods who had come down here pondered long,
- thinking, "We have not yet arrived."
What the poem says
The gods have come down to Ayōtti to watch the coronation, but the city is so rich, beautiful and joyful that it seems no different from their own golden city in heaven.
Confused, they wonder whether they have actually left home at all. This closes the long description of the decorated city that began several verses earlier.