கம்பராமாயணம் 1525 · அயோத்தியா 2.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாற்கடல் படு மணி - நான்கு கடல்களிலும் உண்டாகிய சிறந்த மாணிக்கங்களால் ஆகிய; நளினம் - தாமரை மலர்கள்; பூத்தது - பூத்ததாகிய; ஓர் - ஒப்பற்ற; பாற்கடல் படுதிரை - பாற்கடலின் அலைமேல் பொருந்திக் கிடந்த; பவள வல்லியேபோல் - பவளக் கொடிபோல; கண் கடை அளி பொழிய - கண்ணின் கடை அருளைச் சொரிய; பொங்கு அணை மேல் - (நுரை போலப்) பொங்குகின்ற (மெத்தென்ற வெள்ளிய) படுக்கையின்மேலே; கிடந்தாள்தனை - உறங்குகின்றவளை; விரைவின் எய்தினாள் - விரைவாகச் சென்றடைந்தாள்.
மணிகளால் ஆகிய தாமரைகள் பூத்த பவளக்கொடி பாற்கடல் அலைமேல் கிடத்தல்போல, வெண்மையான, தூய அணைமேல் செந்நிற மேனி உடைய அழகிய தாமரைபோலும் கண், கை, கால், முகம் உடைய கைகேயி உறங்கினாள் என்பதாம். கைகேயி பவளக்கொடி போல்வாள்; வெள்ளிய மெத்தை பாற்கடல் படு திரை; கைகேயியின் உறுப்புகள் மணி நளினம் என உவமை காண்க. இது இல்பொருள் உவமையாம். “பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி, போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதை”, “பௌவ நீர்ப்பவளக் கொடி போல்பவள்” (சிந்தா. 2413, 874.) என முன்னோர் கூறியவற்றை இங்கு ஒப்பிடுக. கடைக்கண்களில் அருள்வழியக் கிடந்தாள் என உறங்கும்போது இவளைக் கண்டு கூறியதனால் இவளது உளத் தூய்மையும், தூய அன்பும், அகத்துள்ள பேரிரக்கமும் புலனாகும். இத்தகைய பேரருள் உள்ளமோ வன்மனத்தோடு தயரதன்பால் வரம் கேட்டது என்று உணர்வார்க்கு உச்சநிலை தோன்ற, இவள் உள்ள நிலையை இங்குக் கூறினாராம். இத்தகைய அருள் உள்ளமுடையாளையும் திரித்தாள் எனப் பின்னர்க் கூனியின் சூழ்ச்சியாற்றலைப் புலப்படுத்தவும் இது வேண்டி நின்றது. இராமனது நாயகத்தன்மை, இலக்குவனது அடிமைத்திறம், பரதனது தியாக உள்ளம், சத்துருக்கனனது அடியார்க்கடியவனாம் தகைமை, அனுமனின் பக்தி, சுக்கிரீவ மகாராஜாவின் நட்பு, சடாயுவின் தியாகம் ஆகிய இன்ன பிற நற்குணங்கள் வெளிப்படவும், இராவணாதிகளின் சிறுமையும் இழிவும் உலகம் அறியவும், இமையோர் துன்பம் தீரத்தக்க காலத்தே தன் மனத்தைக் கன்மனம் ஆக்கிக்கொண்டு செய்த எத வடா கடு முதல் என்று கருதி, ‘அளிபொழிய’ என்றார் எனலும் ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a peerless coral vine on which lotuses made of gems
- from the four oceans had bloomed, lying on the waves of the milk sea,
- with grace streaming from the corners of her eyes, upon the soft, swelling couch
- lay one; to her the hunchback swiftly came.
What the poem says
Mantarai reaches Kaikēyi, who is asleep. The poet paints her as a coral vine, red and slender, lying on the white foam of the ocean of milk, with lotuses of jewels for her eyes, face, hands and feet: an imaginary image, since no such thing exists in nature.
Even asleep, kindness seems to pour from the corners of her eyes. The poet stresses her gentle, loving nature here so that her later harshness will show how powerful Mantarai's persuasion was. Another reading holds that she hardened her heart for the gods' larger purpose.