கம்பராமாயணம் 1528 · அயோத்தியா 2.45

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அணங்கு - வருத்துகின்ற; வாள் - கொடிய; விட அரா - விடப் பாம்பு ஆகிய இராகு; அணுகும் எல்லையும் - நெருங்கும் நேரத்திலும்; குணம் கெடாது - தன் தன்மை சிறிதும் மாறாமல்; ஒளி விரி - ஒளியை எங்கும் வீசுகின்ற; குளிர்வெண்திங்கள் போல் - குளிர்ச்சியையுடைய வெண்மையான சந்திரனைப் போல; பிணங்கு - மாறுபடுகின்ற; வான் பேர் இடர் - மிகப் பெரிய துன்பம்; பிணிக்க - (உன்னை வருத்திக்) கட்ட; நண்ணவும் - நெருங்கி வரவும்; நீ உணங்குவாய் அல்லை - நீ (அதற்கு) வருந்துபவளாக இல்லை; உறங்குவாய் - (நிம்மதியாகத்) தூங்குகின்றாய்; என்றாள்.

“ஒருபுடை பாம்பு பொளினும் ஒருபுடை, அங்கண்மா ஞாலம் விளக்குறா உநீ திங்கள் போல்” (நாலடி. 148) என்றது போல இங்கும் திங்களைச் சொன்னார். இராகு திங்களை விழுங்கும் என்பது புராணிகர் கூற்று. கைகேயிக்கு வரும் பேர் இடர் அவள் மாற்றாளாகிய கோசலை செல்வம் பெறுதலாம். உணங்குவாய், உறங்குவாய் நிகழ்காலம் எதிர் காலமாயிற்று, கால வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even as the cruel, tormenting serpent of poison draws near,
  2. like the cool white moon that keeps its nature unchanged and spreads its light,
  3. though a vast and hostile disaster closes in to bind you,
  4. you do not wither; are you sleeping?" she said.

What the poem says

Mantarai's first words are a taunt. Kaikēyi, she says, is like the moon, which goes on shining calmly even as the serpent Rāhu approaches to swallow it in an eclipse.

A great calamity is about to seize her, and still she sleeps without a care. The disaster Mantarai means is that Kōcalai, Kaikēyi's co-wife, is about to rise to power through her son.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṇaṅku vāḷ viṭa arā aṇukum ellaiyum
kuṇam keṭātu oḷi viri kuḷir veṇ tiṅkaḷpōl,
piṇaṅku vāṉ pēr iṭar piṇikka naṇṇavum,
uṇaṅkuvāy allai, nī uṟaṅkuvāy?' eṉṟāḷ.