கம்பராமாயணம் 1531 · அயோத்தியா 2.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழ்ந்த பேர் அன்பினாள் - (இராமன் பால்) ஆழங்காற்பட்ட பேரன்பு உடையவளாய கைகேயி; அனைய கூறலும் - அத்தகைய வார்த்தைகளைச் சொல்லுதலும்; சூழ்ந்த தீவினை நிகர் கூனி - அவளைச் சுற்றிக் கொண்ட பாவத்தை யொத்த மந்தரை; சொல்லுவாள் - பேசத் தொடங்கி; நின் நலம் வீழ்ந்தது - உனது நன்மை அழிந்து போனது; திருவும் - உன் செல்வமும்; வீந்தது - கெட்டது; கோசலை - உன் மாற்றாளாய கோசலை; மதியினால் - புத்தித் திறமையால்; வாழ்ந்தனள் - செல்வமும் நன்மையும் பெற்று வாழ்ந்தாள்; என்றாள் - என்று கூறினாள்.
இராமன்பால் அன்பு பெருகிய கைகேயி கூறவும், அவள் மனத்தைத் திரிக்கக் கூனி ‘கோசலை வாழ்ந்தனள்’ என்று பெண்ணுக்குப் பெண் பொறாமைப்படும் உலகியல்பு பற்றித் தூண்டினாள். சூழ்ந்த தீவினை கைகேயியைச் சுற்றின பாவம் என்றதனால் அது தன் பயனைச் செய்தே தீரும் என்றாராம். ‘இனி வாழ்வாள்’ என எதிர்காலத்தால் கூற வேண்டுவதை ‘வாழ்ந்தனள்’ என இறந்த காலத்தாற் கூறியது தெளிவுபற்றி வந்த கால வழுவமைதி. கோசலை தன் திறமையால் தயரதனிடம் இதனைச் சாதித்துக் கொண்டாள் என்பதுபடக் கூறிக் கைகேயியைத் தூண்டினாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When she of deep and boundless love said such things,
- the hunchback, like the evil fate that had closed around her, spoke:
- "Your good fortune has fallen; your prosperity is gone;
- Kōcalai has prospered by her cunning," she said.
What the poem says
Faced with Kaikēyi's love for Irāmaṉ, Mantarai changes tack and plays on rivalry between co-wives. She declares that Kaikēyi's fortunes are finished and that Kōcalai has triumphed, implying that Kōcalai cleverly manoeuvred the king into this.
She speaks of Kōcalai's triumph as already accomplished. Mantarai is likened to the evil fate that has already closed around Kaikēyi and must now bear its fruit.