கம்பராமாயணம் 1541 · அயோத்தியா 2.58

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண் உறு - அலங்கரித்தல் அமைந்த; கடகரி - மத யானையையுடைய; பரதன் -; பார்மகள் கண்ணுறு கவினராய் - நிலமகள் விரும்பத் தக்க அழகுடையவராய்; இனிது காத்த - இனிமையாக அரசாண்ட; அம்மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் - அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை உடைய அரசர் வரிசையில் வைத்து; எண்ணுற - நினைக்குமாறு (அரசனாக); பிறந்திலன் - பிறக்கவில்லை; இறத்தல் நன்று - (எனவே) உயிர்வாழ்வதனினும் இறப்பதே மேல்; என்றாள் -

அரசனாகும் பேறு இல்லாதவன் அரசகுலத்தில் பிறந்து வாழ்வதைவிடச் சாவதே மேல் என்று பரதனுக்காக இரங்கினாளாம். மன்னர் மாலை - அரச பரம்பரை வரிசை. அது குலமுறை கிளத்து படலத்திற் கூறியவாற்றான் உணர்க. மண் - மார்ச்சனை - அஃதாவது ஒலிச்செறிவு ஆகும். அது மண்பூசப் பெறுதலால் உளதாகும் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Paratan, lord of caparisoned, rutting elephants: the Earth Lady
  2. they guarded sweetly, with a beauty fit for her eyes, those
  3. kings whose drums are tempered with clay; in their line
  4. he was not born to be counted; better that he die," she said.

What the poem says

Mantarai goes further: Paratan, a prince with war elephants of his own, has been born into the great line of solar kings, rulers whose beauty pleased the Earth goddess herself and whose war drums were tuned with a coating of clay.

Yet he will never be counted in that royal line. For a prince who will never rule, she says, death would be better than life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṇṇuṟu kaṭa karip parataṉ, pār makaḷ
kaṇṇuṟu kaviṉarāy iṉitu kātta am
maṇṇuṟu muracuṭai maṉṉar mālaiyil
eṇṇuṟap piṟantilaṉ, iṟattal naṉṟu' eṉṟāḷ.