கம்பராமாயணம் 1542 · அயோத்தியா 2.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆக்கிய பொலங்கழல் அரசன் - பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்த தயரதன்; பண்டு - முன்பே; பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னை - (அரசாட்சி ஏற்கும்) பாக்கியம் செய்யாத பரதனை; ஆணையால் - கட்டளையால்; தேக்கு உயர் கல் அதர் - தேக்கு மரங்கள் நிரம்பிய மலைவழியில்; சேணிடை - வெகுதூரத்தில் (கேகய நாட்டுக்கு); கடிது - விரைவாக; போக்கிய - (செல்லும்படி) அனுப்பிவைத்த; பொருள் - காரணம்; இன்று எனக்கு -; போந்தது - தெரியவந்தது.
பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பியது, “ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற் காணிய விழைவதோர் கருத்தன்; ஆதலால் ....... கேகயம் புக....... போதி” என்றனன் (1309.) என முன்னர் வந்துள்ளது. கேகய தேசத்தரசனான பரதனது மாமன் யுதாசித்து அழைக்கப் பரதனைத் தயரதன் அனுப்பினான். யுதாசித்து அழைப்பின் பேரில்தான் அனுப்பினானேயன்றித் தானாக அனுப்பவில்லை தயரதன். ஆயினும் அச்செயலைத் தன் கருத்திற்கேற்ப வளைத்துக்கொண்ட மந்தரை “இராமனுக்கு முடிசூட்டப் பரதன் தடையாக இருப்பானோ என்று கருதியே தயரதன் பரதனைக் கேகயத்திற்கு விரைவாக அனுப்பிவைத்தான்” என்று கூறினாள். பரதன்பால் பிரிவு காட்டினாள் போன்று பேசிய மந்தரை ‘கோசலை வாழ்ந்தனள்’ என்றாற் போல, தயரதனும் திட்டமிட்டே இராமனுக்கு முடிசூடும் செயலை நடத்தத் தொடங்கினான் என்றும் கூறி, கைகேயியின் மனத்தில் மாசு ஏற்றினாள். கல்வழியில் அனுப்பினான்; வெகுதூரத்தில் அனுப்பினான்; விரைவாக அனுப்பினான் என்றெல்லாம் சொற்களை அடுக்கிப் பெய்து மந்தரையின் சொற் சாதுரியத்தைக் கம்பர் காட்டிய அருமை அறிந்து இன்புறத் தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "That Paratan, who earned no such good fortune, some time ago
- the king of wrought golden anklets, by his command,
- sent off in haste along the stony road where teak trees tower, far away:
- the reason for that has dawned on me today."
What the poem says
Paratan is away in Kēkayam, his mother's homeland. In fact his uncle had invited him and the king simply let him go. Mantarai twists this into a plot: Tacarataṉ, she claims, deliberately sent Paratan far off, quickly, along a rough mountain road, so that he would not stand in the way of Irāmaṉ's coronation.
Now, she says, she understands why. The poet shows her skill with words in the way she piles up "far", "quickly" and "stony" to make the journey sound like banishment.