கம்பராமாயணம் 1544 · அயோத்தியா 2.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(மந்தரை மீண்டும்) அரசர் இல் பிறந்து - அரச குலத்தில் பிறந்து; பின் - பிறகு; அரசர் இல் வளர்ந்து - அரசு குடும்பத்தில் வளர்ந்து; அரசர் இல் புகுந்து - அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு; பேர் அரசி ஆன நீ - (சக்கரவர்த்தியின்) பட்டத்தரசியாக ஆன நீ; கரைசெயற்கு அருந்துயர்க் கடலில் - கரை இடுவதற்கு முடியாத துன்பக்கடலில்; வீழ்கின்றாய் - வீழ்ந்து கொண்டேயிருக்கிறாய்; உரை செய - (நான்) எடுத்துச் சொல்லியும்; கேட்கிலை - கேட்கின்றாயில்லை; உணர்தியோ? - பின் அனுபவத்தால் உணர்வாயோ?; என்றாள் -
அரச குலத்தில் பிறந்து வளர்ந்து பட்டத்தரசியாக இருக்கிற உனக்கு, உன் அரசனாகாது மாற்றாள் மகன் அரசன் ஆவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள எப்படி நேர்ந்தது? என்று கூறினாள் கூனி. உணர்தியோ - அறிவினால் அறிந்து கொள்ளாத நீ அனுபவத்தால் எதிர்காலத்தில் சக்களத்தியிடம் துன்பப்பட்டுப் புரிந்துகொள்வாயோ என்பது பொருள். இனி உனக்கு உணர்ச்சி யுள்ளதோ என்பது பொருந்துமேற் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Born in a house of kings, then raised in a house of kings,
- married into a house of kings, you who became the great queen
- are falling into a sea of sorrow that has no shore!
- You will not listen when I tell you; will you understand only later?" she said.
What the poem says
Mantarai turns back to Kaikēyi and appeals to her royal pride. Born a princess, raised in a palace and married to the emperor as his chief queen, how can she calmly accept that her co-wife's son is to be king instead of her own?
Kaikēyi, she says, is sinking into an endless sea of trouble. If she will not heed a warning now, she will learn the hard way, through suffering under her rival.