கம்பராமாயணம் 1546 · அயோத்தியா 2.63

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாய் கயப்புற - வாய் கசக்கும்படி; மந்தரை - கூனி; வழங்கிய - கூறிய; வெஞ்சொல் - கொடிய வார்த்தை; காய் - எரிகின்ற; கனல்தலை - நெருப்பிடத்தில்; நெய் சொரிந்தென - நெய் ஊற்றினாற் போல; கதம் - கோபத்தை; கனற்ற - மேலும் தூண்டி எரியச் செய்ய; (அதனால்) கேகயர்க்கு இறை திருமகள் - கேகய நாட்டு அரசனது அழகுப் பெண்ணான கைகேயி; கிளர் இளவரிகள் தோய் - எழுந்த இளங்கோடுகள் பொருந்திய; கயல் கண்கள் - கயல் போன்ற கண்கள்; சிவப்புற - (சினத்தால்) செம்மை அடைய; நோக்கினள் - பார்த்து; சொல்லும் - பேசத் தொடங்கினாள் (மேல் தொடரும்)

நெய் விடவிட நெருப்பு எரிதல் போல மந்தரை பேசப் பேச கைகேயிக்குச் சினம் மூண்டது. இராமனிடம் சினம் மிகுந்து கூறிய சொற்கள் ஆதலின் சொன்ன அவளுக்கும் வாய் கசக்கும் என்றார், ‘கைக்குமே, தேவரே தன்னினும் வேம்பு’ என்றது (நாலடி. 95) போல. இனி வருவன கைகேயி மாற்றமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The harsh words Mantarai uttered, bitter enough to sting her own mouth,
  2. stoked the queen's anger as ghee poured on a blazing fire;
  3. and the noble daughter of the Kēkaya king, her carp-like eyes,
  4. lined with fine young streaks, turning red, glared and spoke.

What the poem says

Mantarai's words, so bitter with hatred of Irāmaṉ that they must have stung her own mouth, only feed Kaikēyi's anger, like ghee poured on a fire.

But at this point the anger is directed at Mantarai. Kaikēyi's eyes, long and shapely like carp, go red with fury, and she begins to rebuke her maid; her reply follows in the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāy kayappuṟa mantarai vaḻaṅkiya veñ col,
kāy kaṉaltalai ney corinteṉa katam kaṉaṟṟa,
kēkayarkku iṟai tirumakaḷ, kiḷar iḷa varikaḷ
tōy kayal kaṇkaḷ civappuṟa nōkkiṉaḷ, collum.