கம்பராமாயணம் 1547 · அயோத்தியா 2.64

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடியவளே!; வெயில்முறை - ஒளிவரிசையை உடைய; குலக்கதிரவன் - சிறந்த சூரியன்; முதலிய மேலோர் - முதலாகிய உயர்ந்தோர்கள்; உயிர் முதல் பொருள் - உயிர் முதலாகிய பொருள்கள்; திறம்பினும் - போவதாயினும்; உரை திறம்பாதோர் - சத்தியத்தினின்றும் மாறுபடார்; (அத்தகைய) மயில்முறைக் குலத்து உரிமையை - மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய; மனுமுதல் மரபை - வைவச்சுத மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின் அரச பரம்பரையை; செயிர் உற - குற்றம் பொருந்தும்படி; புலைச் சிந்தையால் - கீழ்மைப் புத்தியால்; என் சொனாய்? - யாது பேசினாய்?

குலத்தின் முதல்வன் சூரியன்; அவன் மகனாய் இருந்து முதலில் அயோத்தியில் அரசாண்டவன் மனு. ஆதலால் இரண்டையும் கூறினார். மயில்முறைக் குலத்து உரிமையாவது - மயிலின் குஞ்சுகளுள் முதற்பார்ப்புக்கே தோகையின் பீலி பொன்னிறம் பெறும். அதன் வழிப்பார்ப்புகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்தமகன் அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் ஆம். அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் செய்தியே என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும் சொல் ஆதலின், “கேகய குலத்து உரிமையை” என்று பொருள்கூறி, கைகேயி தான் பிறந்த குலத்தைச் சுட்டினாள் எனலும் ஆம். “யான் பிறந்த கேகய குலத்துக்கு, புகுந்த மனுமுதன் மரபுக்கும் குற்றம் அடைய என்ன வார்த்தை சொன்னாய்?” என்று கூனியைக் கடிந்தாள் எனலாம். பெண்டிர், புக்க குலத்தையும், பிறந்த குலத்தையும் ஒக்க நினையும் வழக்கம் உண்டு என்பதை “புக்க வழிக்கும் போந்த வழிக்கும், புகை வெந்த, ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ?” என்ற (5224) பாடற் பகுதியிலும் காணலாம். முதற் பொருளோடு “பலாவம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும், கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற பின்னுள்ளோர் பாடல் (தணிகைப். களவு. 244) பொருந்துவதாகும். புலை - கீழ்மை. புல் என்பது அற்பம் என்றாகும். ஆதலின் அற்பத் தன்மை. எனவே கீழ்மை என்றாயிற்று. மந்தரை கூறியது அரச குலத்து முறைமைக்கு மாறுபடாமல் பொருந்துமேல் ஏற்றுக்கொள்ளலாம் என்பதுபோலச் சற்றே கைகேயியின் மனத்தில் மெல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The noble ones, beginning with the Sun of our line with his ordered rays,
  2. never swerve from their word, though life and all else should swerve;
  3. the birthright that runs as in the peacock's brood, the lineage that begins with Maṉu,
  4. with your base mind you would stain it! What have you said, wicked one?"

What the poem says

Kaikēyi rebukes Mantarai. The solar dynasty, descended from the Sun through Maṉu, the first king of Ayōtti, is famous for never breaking its word, even at the cost of life. Its custom is that the eldest son inherits.

The "peacock's order" refers to a belief that only the first chick of a peacock's brood grows the golden tail feathers. Kēkayam, Kaikēyi's homeland, also means peacock, so she may be defending the honour of both her families. Yet her stress on "rightful order" hints that her mind is starting to shift.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veyil muṟaik kulak katiravaṉ mutaliya mēlōr,
uyir mutal poruḷ tiṟampiṉum urai tiṟampātōr;
mayil muṟaik kulattu urimaiyai, maṉu mutal marapai
ceyir uṟap pulaic cintaiyāl, eṉ coṉāy? tīyōy!