கம்பராமாயணம் 1549 · அயோத்தியா 2.66

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறந்து இறந்து போய் - (மக்கள்) பிறந்து இறந்து சென்று; பெறுவதும் இழப்பதும் புகழே - அடைவதும், இழந்துவிடுவதும் புகழே ஆகும்; நிறம் திறம்பினும் - ஒளி மாறுபட்டாலும்; நியாயம் திறம்பினும் - நேர்மை மாறுபடினும்; நெறியின் திறம் திறம்பினும் - நல்வழியின் கூறு மாறுபடினும்; செய் தவம் திறம்பினும் - செய்யும் நல்ல தவம் மாறுபடினும்; செயிர் தீர் மறம் திறம்பினும் - குற்றம் நீங்கிய வீரம் மாறுபடினும்; வரன்முறை - தம் குலத்தினது மரபு முறைமை; திறம்புதல் - மாறுபடுதல்; வழக்கோ? - நியாயமோ?

எதை இழந்தாலும் புகழை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய முறை தவறி நடந்தால் புகழுக்குக் கேடு உண்டாகும். ஆதலால் வழக்கன்று என்றாள். “தோன்றிற் புகழொடு தோன்றுக” (குறள்) என்பதாம். நிறம் - ஒளி - “தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல்” (குறள். 653. பரி. உரை). “வசை என்ப வையத்தார்க்கெல்லாம் இசை என்னும் எச்சம் பெறாஅ விடின்” (குறள் 238) என்னும் வாக்கு நினையத்தக்கது. ‘வரன்முறை திறம்பாமை’ பரதன் அரசு ஏற்பதில் நியாயப்படுத்தப்பட்டால் மற்றவை திறம்புதலைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன் என்ற அளவில் கைகேயியின் மன மாற்றம் நமக்கு இங்கே புலனாகும். இதுவே கூனியின் முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம். செய்தவம் மேற்கதி, வீடுபேறுகளைக் கூட்டுவிப்பது. இம்மைப் புகழை நோக்க அவற்றைக் கைவிடினும் விடலாம் என்ற கைகேயியின் மனமாற்றம் இங்கே

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What men win and lose, as they are born and die and pass away, is fame;
  2. though lustre should fail, though justice itself should fail, though the way
  3. of right conduct should fail, though the penance one performs should fail, though flawless
  4. valour should fail, is it right that the order of succession should fail?"

What the poem says

Kaikēyi argues that the only thing a mortal truly gains or loses is fame. Glory, justice, right conduct, penance or valour may all falter, but to break the rightful order of succession can never be right.

On the surface she is still defending Irāmaṉ's claim. But by ranking succession above justice and penance, she leaves an opening: if Paratan's claim could be made to look rightful, the other considerations would not stop her. Mantarai's first assault has won its first ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piṟantu iṟantu pōyp peṟuvatum iḻappatum pukaḻē,
niṟam tiṟampiṉum, niyāyamē tiṟampiṉum, neṟiyiṉ
tiṟam tiṟampiṉum, cey tavam tiṟampiṉum, ceyir tīr
maṟam tiṟampiṉum, varaṉmuṟai tiṟamputal vaḻakkō?'