கம்பராமாயணம் 157 · பால 4.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அத்தகைய மாண்பு மிகுந்த நகரத்துக்கு அரசனாய் இருப்பவன்; அரசர்க்கு அரசன் - மன்னர்களுக் கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி; மாண் தனிக் கோல் - மாட்சிமை மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சிமுறை; உலகு ஏழினும் செல்ல நின்றான் - ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து நிலைத்தவனாவான். மேலும் அவன்; இம்மாண் கதைக்கு ஓர் இறையாய - இந்தப் பெருமைபொருந்திய இராமாயணம் என்னும் கதைக்குத் தலைவனான; இராமன் என்னும் மொய்மாண் கழலோன்தரு - இராமன் என்ற பெயரை உடைய வன்மையும் பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்த நம்பியைப் பெற்ற; அன்னான் நல்லற மூர்த்தி - நல்லறத்தின் வடிவமுமாவான்.
‘அம்மாண்நகர்’ என்பதிலுள்ள அகரச்சுட்டு, நகரப்படலத்தில் கூறிய பெருமையை எல்லாம் குறித்து நின்றது. ‘தனி’: தயரதனது ஒப்பற்ற ஆட்சியை உணர்த்தும். ‘கோல்’: நல்லாட்சியைக் குறிக்கும் ஒரு மரபுச் சொல். இவ் வேந்தனது ஆணை எவ்வுலகினிலும் செல்லும் என்பதனை ‘உலகேழினும் செல்ல’ என்றார். இறை: தலைவன். மொய்: வலிமை. ராமன்: அழகன் என்ற பொருள் உடையச் சொல்லாகும். மூர்த்தி: உருவம் (வடிவம்). நல்லறமே திரண்டு ஓர் வடிவானவன் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- King of that glorious city, king of kings,
- he stood with his splendid, peerless, upright sceptre holding sway over all seven worlds;
- he was the father of the hero with mighty, glorious anklets named Irāmaṉ,
- the one lord of this great tale — he was virtue itself in bodily form.
What the poem says
A new canto begins, on the kingship of Tacarataṉ. Having described Ayōttī, the poet now presents its ruler. He is emperor over other kings, his just rule reaches all seven worlds, and above all he is the father of Irāmaṉ, the hero of this story.
Tacarataṉ is called righteousness itself given a body. The upright sceptre is the traditional symbol of just rule.