கம்பராமாயணம் 1575 · அயோத்தியா 3.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்றல் அருந் தொடை மன்னன் - மணங் கமழும் அரிய மலர் மாலையைச் சூடிய தயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்றவளான கைகேயி; நின்று - தன் நிலையில் மாறாது நின்று; தொடர்ந்த - தன்னைத் தழுவ நீண்ட; நெடுங் கை தம்மை நீக்கி - (அரசனுடைய) நீண்ட கைகளை விலக்கி; மின் துவள்கின்றது போல - மின்னற் கொடி துவண்டு வீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து; ஒன்றும் இயம்பலள் - ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள் - பெருமூச்சு விடத் தொடங்கினாள்.
தேவியர் மூவரில் கைகேயியை தயரதன் மிகவும் விழைந்தான் என்பது ‘மன்னன் ஆவி அன்னாள்’ என்னும் தொடரால் விளங்குகிறது. மன்னன் துயர் கண்டும் அவள் நெஞ்சு இளகாமல் இருந்தது தோன்ற ‘நின்று’ என்றார். வீழ்ந்தாள், இயம்பலள் - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Unmoved, she thrust away the long arms that reached for her,
- and fell to the ground like a lightning streak that droops;
- saying nothing at all, she began to heave long sighs,
- she who was as the very life of the king with the rare fragrant garland.
What the poem says
Kaikēyi pushes away the king's arms and drops back to the floor like a crumpling streak of lightning. She says nothing and only sighs deeply.
Calling her 'the king's very life' shows that of his three queens she was the one Tacarataṉ loved most, which is what makes her coldness so cruel. The word 'unmoved' (niṉṟu, literally 'standing firm') marks that even the sight of his distress does not soften her heart.