கம்பராமாயணம் 1576 · அயோத்தியா 3.9

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது கண்ட அலங்கல் மன்னன் , அஞ்சி ,
`'என்னை நிகழ்ந்தது ? இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் ! உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி ! சொல்லிடு ! '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த; அலங்கல் மன்னன் - மாலையைப் பூண்ட அரசன்; அஞ்சி - அச்சம் உற்று; “நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது; இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார் - இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்; உன்னை இகழ்ந்தவர் மாள்வர் - உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால் கொல்லப்பட்டு அழிவர்; உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்; சொன்ன பின் - நீ கூறிய பிறகு; என் செயல் காண்டி - என் செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாது சொல்வாய்;” என்றான் - என்று சொன்னான்.

இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு, கொண்ட துணுக்கத்தினையும் அவள்மீது கொண்ட காதலால் அவளைத் தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர் என்பான் மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு - துணைவினை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing that, the garlanded king took fright
  2. and said: 'What has happened? Of all who live in these seven worlds,
  3. those who have slighted you shall die. When you have told me all that befell,
  4. you shall see what I do. Speak!'

What the poem says

Alarmed at finding his queen in such a state, Tacarataṉ tries to comfort her. Out of love for her he swears that anyone in all the seven worlds who has wronged her will die, and begs her to tell him everything at once.

He says 'they shall die' rather than 'I shall kill them', putting it as something that will simply happen. His rash promise, made before he knows what she wants, prepares the trap that follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu kaṇṭa alaṅkal maṉṉaṉ, añci,
`'eṉṉai nikaḻntatu? iv ēḻu ñālam vāḻvār
uṉṉai ikaḻntavar māḷvar uṟṟatu ellām
coṉṉapiṉ eṉ ceyal kāṇṭi! colliṭu!'' eṉṟāṉ.