கம்பராமாயணம் 1589 · அயோத்தியா 3.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை; எய்த நோக்கி - பொருந்தப் பார்த்து; நெய்ந் நிலை வேலவன் - நெய் பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; “நீ திசைத்தது உண்டோ - நீ மனம் பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத் தன்மையுடையவர்கள் எவரேனும் கட்டிச்சொன்ன; வஞ்சம் உண்டோ - வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக; உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை உண்மையாகச் சொல்வாய்;” என்றான்.
தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின், ‘நீ திசைத்தது உண்டோ அல்லது பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன் மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீது ஆணையிட்டுக் கூறியவன் இப்பொழுது அவளுக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking closely at her who stood in this state,
- the king of the oiled spear said: 'Is your mind bewildered?
- Is there some deceit contrived by people of false ways?
- Tell me the truth of your state; I swear it on myself.'
What the poem says
Astonished at the change in Kaikēyi, Tacarataṉ asks whether she has lost her senses, or whether some false-hearted people have poisoned her mind, and begs her to tell him the truth.
Earlier he swore by Irāmaṉ, thinking she loved him; now, realising she has no love left for Irāmaṉ, he swears by himself instead.