கம்பராமாயணம் 1590 · அயோத்தியா 3.23

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'திசைத்ததும் இல்லை ; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை ; முன் ஈந்த இவ் வரங்கள் ,
குசை பரியோய் ! தரின் இன்று கொள்வென் ; அன்றேல் ,
வசை திறம் நின் வயின் வைத்து மாள்வென் ' என்றாள் .

பொருள் · Meaning in Tamil

குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்) “கடிவாளம் பூட்டிய குதிரைகளை உடைய அரசே!; திசைத்ததும் இல்லை - நான் திகைத்ததும் இல்லை; தீயோர் எனக்கு வந்து இசைத்ததும் இல்லை - கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச் சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயால்) கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் - இப்பொழுது கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல் - அன்றிக் கொடுக்காமல் போனால்; வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின் கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு; மாள்வென் - இறப்பேன்;” என்றாள்.

தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர விருப்பமில்லை என்று உணர்ந்த கைகேயி, ‘வரம் கொடுத்தால் வாழ்வேன்; இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் - கருத்துடை யடைகொளி. யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப் புகழ் உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My mind is not bewildered; nor have wicked people come
  2. and spoken to me; these boons you gave long ago,
  3. O lord of bridled steeds, if you give them today I will take them; if not,
  4. I will die, and let the stain of reproach rest on you,' she said.

What the poem says

Kaikēyi denies that she is confused or that anyone has misled her. Sensing that the king does not want to grant what she asked, she gives him an ultimatum: give her the boons today, or she will die and leave him forever disgraced.

Her form of address, 'lord of bridled steeds', carries a pointed hint: it was she who drove his chariot in the battle with Campara, and it was through her that he won the glory that earned her these boons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ticaittatum illai; eṉakku vantu tīyōr
icaittatum illai; muṉ īnta iv varaṅkaḷ,
kucaip pariyōy! tariṉ iṉṟu koḷveṉ; aṉṟēl,
vacait tiṟaṉ niṉvayiṉ niṟka māḷveṉ' eṉṟāḷ.