கம்பராமாயணம் 1593 · அயோத்தியா 3.26

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நாரியர் இல்லை இஞ் ஞாலம் ஏழும் என்னக்
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும்
பூரியர் எண் இடை வீழ்வன் ' என்று பொங்கும் ;
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் .

பொருள் · Meaning in Tamil

வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள் வீரத்தையும் வென்று தன்னுள் அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய தயரதன்; இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியர் இல்லை என்ன - பெண்கள் இல்லை என்னும்படி; கூரிய வாள் கொடு கொன்று நீக்கி - கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி; யானும் பூரியர் எண்ணிடை வீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள் எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் - சினம் மிகுவான்.

கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள் கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான். ஆனால், அச்செயல் தகாது என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி வெளிப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that it may be said there are no women anywhere in this world,
  2. I will kill them off with my sharp sword, and I too
  3. will fall among the number of the base,' he says, seething,
  4. he whose spear had swallowed up the valour of the valiant.

What the poem says

In a wild surge of rage against Kaikēyi, Tacarataṉ, whose spear has overcome the mightiest warriors, thinks of wiping out all womankind with his sword, even if it ranks him among the lowest of men.

The outburst shows the extremity of his fury; he does not act on it, recognising that such a deed would be unworthy of him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāriyar illai iñ ñālam eṅkum eṉṉa
kūriya vāḷkoṭu koṉṟu nīkki yāṉum
pūriyar eṇṇiṭai vīḻveṉ' eṉṟu poṅkum;
vīriyar vīram viḻuṅki niṉṟa vēlāṉ.