கம்பராமாயணம் 1595 · அயோத்தியா 3.28

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒறுப்பினும் அந்தரம் ; உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம் ' என்று வாய்மை மன்னன் ,
'பொறுப்பினும் அ நிலை போகிலாள் ஐ வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது ' என்று எழுந்தான் .

பொருள் · Meaning in Tamil

வாய்மை மன்னன் - சத்தியத்தைப் பேணிக் காக்கும் தயரதன்; “ஒறுப்பினும் அந்தரம் - இவளைத் தண்டித்தாலும் தீமை; உண்மை ஒன்றும் ஓவா - மெய்யைச் சிறிதும் காவாமல்; மறுப்பினும் அந்தரம் - கொடுத்த வரங்களைத் தர மறுத்தாலும் தீமை,” என்று - என்று கருதி; “இந் நிலை போகிலாளை - இந்நிலையினின்றும் மாறாதவளை; பொறுப்பினும் - பொறுத்து அடங்குவதைக் காட்டிலும்; வாளால் இறுப்பினும் - வாளால் கொல்வதைக் காட்டிலும்; இரப்பது ஆவது - இவளை வேண்டி யாசிப்பதே பொருத்தம்;” என்று எழுந்தான் - என்று கருதி, அது செய்யப் புறப்பட்டான்.

பலவாறாகத் துன்பப்பட்ட தயரதன் இறுதியில் இரந்து வேண்டுதல் ஒருவேளை பயன் தரலாம் என்று கருதி அவ்வாறு செய்யத் துணிந்தான். பொறுப்பு, இறுப்பு - தொழிற்பெயர்கள்; இன் - உறழ்ச்சிப்பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To punish her is ruin; to refuse, failing truth
  2. in the least, is ruin,' thought the king of truth;
  3. 'rather than bear with her who will not leave this state, or cut her down
  4. with the sword, it is better to beg,' and he rose.

What the poem says

Tacarataṉ weighs his choices. Punishing Kaikēyi would be a calamity; breaking his word by refusing the boons would be a calamity too. Simply enduring it is impossible, and killing her is unthinkable.

He decides that the only course left is to plead with her, in the hope that begging may yet soften her, and he rises to do so. Here the canto's metre changes as the king's supplication begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṟuppiṉum antaram; uṇmai oṉṟum ōvā
maṟuppiṉum antaram' eṉṟu vāymai maṉṉaṉ,
'poṟuppiṉum in nilai pōkilāḷai vāḷāl
iṟuppiṉum āvatu irappatu' eṉṟu eḻuntāṉ.