கம்பராமாயணம் 1596 · அயோத்தியா 3.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கந்து கொல் யானைக் கழல் மன்னர் - கட்டுத்தறியை முறிக்கும் யானைப்படையையுடைய வீரக்கழல் அணிந்த அரசர் பலரும்; மேல் மேல் முந்தி வந்து - மேலே மேலே (ஒருவர்க் கொருவர் முற்பட்டு) வந்து; வணங்கி மிடை தாளான் - வழிபட்டு நெருங்குகின்ற பாதங்களையுடைய தயரதன்; கோல் மேற்கொண்டும் - தாம் ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும்; குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்போல் - (அதில் வரும்) குற்றங்களை நீக்கக் கருத்துக் கொண்ட நல்ல அரசரைப் போல; மேல் உற்றது உண்டு எனின் - மேலே வரும் நன்மை உண்டென்றால்; பொறை நன்று ஆம் என்னா - பொறுமை நல்லதாகும் என்று எண்ணி; கால்மேல் வீழ்ந்தான் - கைகேயியின் கால்களில் விழுந்து வணங்கினான்.
தம் பதவியே பெரிதெனக் கருதாமல் குற்றம் நிகழாது காக்க அரும் பாடுபடும் அரசரைப் போலத் தன் பெருமை நோக்காது கைகேயியைச் சினம் தணிவித்துக் குற்றம் நிகழாது காக்க எண்ணிய தயரதன் அவள் காலில் விழுந்து வணங்கினான். கைகேயி மனம் மாறி வரங்களைத் தருமாறு வேண்டுவது தவிர்ந்தால், அவளுக்கு வரந்தர மறுத்தலால் வரும் குற்றமும், இராமனுக்கு அரசளிப்பதாகச் சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும் என்று எண்ணி அவ்வாறு செய்தான். உற்றது - கால வழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like those who, though holding the sceptre, set their minds on removing wrong,
- thinking 'If good may come of it hereafter, forbearance is well,'
- he fell at her feet, he at whose feet the heroic-anklet kings with post-breaking elephants
- crowd in, pressing ever forward to bow.
What the poem says
The king to whose feet countless mighty kings hasten to bow now throws himself at Kaikēyi's feet.
Like a good ruler who puts preventing wrong above his own dignity, Tacarataṉ swallows his pride, hoping that if she relents, both evils can be avoided: refusing her the boons, and breaking his word to make Irāmaṉ king.