கம்பராமாயணம் 1597 · அயோத்தியா 3.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இவ் அரசு நின் சேய் கொள்ளான் - இந்த அரசாட்சியை நினக்கு மகனாகிய பரதன் ஏற்றுக்கொள்ள மாட்டான்; அன்னான் கொண்டாலும் - (ஒருகால்) அவன் ஏற்றுக்கொண்டாலும்; இந்த நானிலம் நள்ளாது - இவ்வுலகம் அதனை விரும்பாது; ஞாலம்தனில் உள்ளார் எல்லாம் - உலகில் உள்ள எல்லோரும்; என்றும் ஓத உவக்கும் - எந்நாளும் புகழ்வதை விரும்பும்; புகழ் கொள்ளாய் - கீர்த்தியைப் பெறமாட்டாய்; எள்ளா நிற்கும் வன்பழி கொண்டு - என்றும் எல்லோரும் இகழ்தற்குரிய வலிய பழியை ஏற்பதனால்; பயன் என் - பயன் யாது?;” என்றான்.
தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனாதலின் அவன் அரசாட்சியைக் கொள்ளான் என்றான். கொண்டாலும் - உம்மை கொள்ளுதலின் அருமை சுட்டியது. நானிலம் - ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று. என்றும் என்பதனைப் பழியோடும் கூட்டி உரைக்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your son will not accept this kingdom; and even if he accepts it,
- this world will not welcome it; you will not win the fame
- that all who live on earth would gladly proclaim forever;
- what do you gain by taking on a hard disgrace that all will scorn?' he said.
What the poem says
Pleading, Tacarataṉ argues from what he knows of Paratan's character: he will never take a throne won this way. Even if he did, the people would not accept him.
Instead of the lasting praise of the whole world, Kaikēyi would earn only a heavy and lasting infamy. What, he asks, could she possibly gain?