கம்பராமாயணம் 1598 · அயோத்தியா 3.31

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வானோர் கொள்ளார் - இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப் பரதன் அரசாள்வதைத் தேவர்களும் ஏற்றுக் கொள்ளார்; மண்ணவர் உய்யார் - மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்; இனி மற்று ஏனோர் செய்கை என் - இனிமேல் பிறர் செய்கையைப் பற்றிச் சொல்லவேண்டுவது என்ன?; நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் - (அவ்வாறாயின்) நீ இந்த அரசினை யாரோடிருந்து ஆட்சி புரிவாய்?; யானே சொல்ல - நானே அவனை அரசேற்குமாறு சொல்ல; கொள்ள இசைந்தான் - ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்; முறையாலே - முறைப்படி; உன் மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே நாட்டைக் கொடுப்பான்;” என்றான்.

யான் வற்புறுத்த இராமன் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை கொண்டு முயலவில்லை. பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக் காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால் தானாகவே பரதனுக்கு நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது முறைகேடு யாதும் நேராது என்றான் தயரதன். எங்ஙனமாவது இராமன் காடு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கருதினான். வானோரையும் மண்ணில் வாழ்வோரையும் முற்கூறினமையின் ஏனோர் என்றது பிற மக்களையும் கீழுலகத்தவரையும் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gods will not accept it; the people of the earth will not survive it; what then
  2. of the doings of others? With whom will you rule this kingdom?
  3. He agreed to take it only because I myself told him to; in due order
  4. he will himself give the land to your son as well,' he said.

What the poem says

Tacarataṉ argues that neither gods nor men would accept Irāmaṉ's banishment; the people would not even survive it. With whom, then, would Kaikēyi rule?

Irāmaṉ never sought the throne; he took it only because his father insisted. There is no need to exile him for Paratan's sake: if she wishes it, Irāmaṉ himself will hand the kingdom to her son, and nothing will be done against right order. The king's one aim is to keep Irāmaṉ from going to the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāṉōr koḷḷār; maṇṇavar uyyār; iṉi maṟṟu eṉ
ēṉōr ceykai? yāroṭu nī iv aracu āḷvāy?
yāṉē collak koḷḷa icaintāṉ, muṟaiyālē
tāṉēnalkum uṉ makaṉukkum tarai' eṉṟāṉ.