கம்பராமாயணம் 1599 · அயோத்தியா 3.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பெண்ணே - பெண்ணாகப் பிறந்தவளே!; வண்மைக் கேகயன் மானே - வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே!; கண்ணே வேண்டும் என்னினும் - என் கண்களையே (நீ) வேண்டும் என்றாலும்; ஈயக் கடவேன் - கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்; என் உள்நேர் ஆவி வேண்டினும் - எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும்; இன்றே உனது அன்றோ - இப்பொழுதே உன் வசமுள்ள தல்லவா?; பெறுவாயேல் - வரத்தைப் பெறவிரும்புவாயானால்; மண்ணே கொள் நீ - நாட்டை மட்டும் பெற்றுக் கொள்வாய்; மற்றையது ஒன்றும் மற - மற்றொரு வரத்தை மட்டும் மறந்துவிடு;” என்றான்.
பெண்களுக்குரிய இரக்கம் உன்பால் இருக்க வேண்டுவதன்றோ என்னும் குறிப்போடு ‘பெண்ணே’ என்றும், உன் தந்தையின் வள்ளன்மை உனக்கும் இருத்தல் வேண்டுமன்றோ என்னும் கருத்தோடு ‘வண்மைக் கேகயன் மானே’ என்றும் கூறினான். கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லையாதலின் அதனையும், அக்கண்ணிற் சிறந்தது உயிராதலின் அதனையும் தருவதாகச் சொன்னான். உனது - குறிப்பு வினைமுற்று. மற்றையது - இராமனைக் காட்டிற்கு அனுப்புதல். அதனை வாயாற் சொல்லவும் அஞ்சி
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if you wanted my very eyes, I am bound to give them; even if you
- wanted the life that dwells within me, is it not yours this very day?
- O woman! Doe-daughter of the generous Kēkaya king! If you must have something,
- take the land; forget the other thing altogether,' he said.
What the poem says
Tacarataṉ offers Kaikēyi anything: his eyes, the most precious of organs, or even his life, which is dearer still. Let her take the kingdom for her son, he begs, but forget 'the other thing'.
He cannot bring himself even to name Irāmaṉ's exile. Calling her 'woman' appeals to the pity a woman should feel, and 'daughter of the generous Kēkaya king' appeals to the generosity she should have inherited from her father.