கம்பராமாயணம் 1603 · அயோத்தியா 3.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“நின்மகன் ஆள்வான் - உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்; நீ இனிது ஆள்வாய் - நீ இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்; நிலம் எல்லாம் - மண்ணுலகம் முழுதும்; உன் வயம் ஆமே - உன் வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்; தந்தேன் - கொடுத்தேன்; உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் - எனக்கு மகனும்; என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் - அனைத்து உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்; இந்த நாடு இறவாமை - இந்த நாட்டை விட்டு வெளியேறாமை மட்டும்; நய - விரும்பிடுவாய்,” என்றான்.
இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியையும், இராமன் சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) என வசிட்டன் உரைத்தது ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your son shall rule; you shall rule at your pleasure; the whole earth
- shall be in your power; rule it; I have given it; I will not go back on my word;
- only let my son, my eye, my life, the good son
- to all living beings, not leave this land; wish for that,' he said.
What the poem says
Tacarataṉ concedes the first boon completely: Paratan shall be king, and Kaikēyi shall have power over the whole land. He will not break his word.
He asks only that Irāmaṉ, his son, his eye, his very life, and a good son to every creature, be allowed to stay in the country. The words recall the sage Vacishṭar's earlier praise of Irāmaṉ as one who is good to all living beings.