கம்பராமாயணம் 1606 · அயோத்தியா 3.39

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொடியாள் இன்ன கூறினள் ; கூறக் குல வேந்தன் ,
'முடி சூடாமல் காத்தலும் மொய் கான் இடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி ' என்னா ,
இடி ஏறு உண்ட மால் வரை போல் மண் இடை வீழ்ந்தான் .

பொருள் · Meaning in Tamil

கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்ன கூறினள் - இப்படிப்பட்டவற்றைச் சொன்னாள்; கூற - சொல்ல; குல வேந்தன் - சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; இனி - இனிமேல்; நெடியான் - இராமன்; முடிசூடாமல் - மகுடம் சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய் கானிடை நீங்க - கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில் உறையச் செல்ல; மெய்யே என் ஆவி நீங்கும் என்ன - உண்மையாக என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரை போல - இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை - பூமியில்; வீழ்ந்தான் - சாய்ந்தான்.

திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான். ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’ எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’ என்ற பாடத்தினும் ‘வெம்பரல்’ என்ற பாடமே சரி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cruel woman said these things; at her words the king of the noble line
  2. cried, 'Uncrowned, into the forest crowded with burning pebbles,
  3. the Tall One goes; then truly my life will go,'
  4. and like a great mountain struck by thunder he fell to the ground.

What the poem says

Kaikēyi's retort leaves Tacarataṉ without hope. Picturing Irāmaṉ going uncrowned into a forest strewn with sharp, sun-scorched stones, he declares that his life will surely leave him, and crashes to the ground like a mountain struck by a thunderbolt.

Irāmaṉ is called 'the Tall One' (Neṭiyāṉ), a name of Vishnu, who grew to fill the three worlds; Irāmaṉ is Vishnu incarnate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭiyāḷ iṉṉa kūṟiṉaḷ; kūṟak kula vēntaṉ,
'muṭi cūṭāmal vemparal moy kāṉiṭai meyyē
neṭiyāṉ nīṅka nīṅkum eṉ āvi iṉi' eṉṉā,
iṭi ēṟuṇṭa māl varaipōl maṇṇiṭai vīḻntāṉ.