கம்பராமாயணம் 1608 · அயோத்தியா 3.41

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒன்றா நின்ற ஆர் உயிர் ஓடு உம் உயிர் கேள்வர்
பொன்ற முன்னம் பொன்றினர் ; என்னும் புகழ் அல்லால் ,
இன்று ஓர் காறும் எல் வளையார் , தம் இறையோரைக்
கொன்றார் இல்லை ; கொல்லுதியோ நீ கொடியோளே ! '

பொருள் · Meaning in Tamil

“எல் வளையார் - ஒளி பொருந்திய வளையலையுடைய மகளிர்; ஒன்றா நின்ற ஆர்உயிரோடும் - உடலோடு ஒன்று சேர்ந்த அரிய உயிருடனே; உயர் கேள்வர் - தம் உயர்ந்த கணவர்; பொன்றா முன்னம் பொன்றினர் - இறப்பதற்கு முன்னே தாங்கள் இறந்தனர்; என்னும் புகழ் அல்லால் - எனப்படும் கீர்த்தியைக் கொண்டனரேயன்றி; இன்றுகாறும் - இன்றுவரை; தம் இறையோரைக் கொன்றார் இல்லை - தம் கணவரைக் கொலை செய்தவர் இல்லை; கொடியோளே - கொடுமையுள்ளங் கொண்டவளே!; நீ கொல்லுதியோ - (அவ்வுலக இயல்புக்கு மாறாக) நீ (என்னைக்) கொல்லுகின்றாயோ?”

இது முதல் ஐந்து பாடல்கள் ஒரு தொடர். 45 ஆம் பாட்டொடு முடியும். அப்பாட்டில் வரும் தோளான் என்பது இவற்றிற்கு எழுவாய். இன்று ஓர்காறும்; ஓர் - அசை.

இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை. நீ கணவனாகிய என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின் உன்போலக் கொடியவர் உண்டோ என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும்.

“பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓர்அற்றே” (புறம் 246)

“தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல், பெருங் கோப்பெண்டும் ஒருங்கு உடன் மாய்ந்தனள்” (சிலம்பு 3:25: 85 - 86)

“காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி, ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின், நன்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்” (மணிமேகலை; 2:42 - 48)

“தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத் தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்நாட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்” (கலிங்கத்துப் பரணி, 483)

“போரில், விடன் ஏந்தும் வேலாற்கும் வெள்வளையினாட்கும் உடனே உலந்தது உயிர்” (புறப்பொருள் வெண்பா மாலை, 262)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That women of bright bangles, with their precious life still joined to them,
  2. died before their noble husbands died, this is the fame they have; other than that,
  3. until this day no women of shining bangles have ever
  4. killed their own lords; will you kill me, O cruel woman?'

What the poem says

This verse begins a run of five in which Tacarataṉ rails at Kaikēyi; the sentence they form ends in the fifth.

Women, he says, have always been praised for dying before or together with their husbands, never for killing them, yet she is about to kill hers. The commentary supports the ideal of the faithful wife who cannot outlive her husband with passages from the Puṟanāṉūṟu, the Cilappatikāram, the Maṇimēkalai, the Kaliṅkattupparaṇi and the Puṟapporuḷ Veṇpāmālai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṉṟāniṉṟa ār uyirōṭum uyir kēḷvar
poṉṟā muṉṉam poṉṟiṉar; eṉṉum pukaḻ allāl,
iṉṟu ōrkāṟum el vaḷaiyār, tam iṟaiyōraic
koṉṟār illai; kollutiyō nī koṭiyōḷē!'