கம்பராமாயணம் 1610 · அயோத்தியா 3.43

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“ஏண்பால் ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண், மடம், அச்சம் - நாணம், மடம், அச்சம் முதலிய; இவை தம் பூண்பால் ஆக - இவற்றைத் தம்முடைய அணிகலன்களாக; காண்பவர் நல்லார் - கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி - புகழை விரும்பி; நாண்பால் ஓரா நங்கையர் - நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம் பால் நணுகாரே - தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்; ஆண்பாலாரே - (அவர்கள்) ஆண்மக்களே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா - பெண்ணினத்தில் யாரோடு சார்ந்தவர் ஆவார்?” (ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்)

பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் - தகாதவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும் காணாததைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கை முதலியன மேற்படின் அருவருத்தல். ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம் அசை; அம்மா - வியப்பிடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who, cherishing fame, take as their own ornaments modesty, innocence and fear,
  2. which never depart from the side of dignity, are good women;
  3. women who do not know the ways of modesty do not belong among them;
  4. they are men indeed; with whom among womankind do they belong? Ah!'

What the poem says

Tacarataṉ declares that true women wear modesty, innocence and fear (traditionally also a fourth, an instinctive recoil from any man not their husband) as their real jewellery.

A woman who knows nothing of modesty does not belong among women at all; she is more like a man, and has no place in womankind. The commentary defines the qualities: modesty is the mind shrinking from what is unfitting; innocence is knowing all yet seeming not to know; fear is alarm at the unfamiliar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēṇpāl ōvā nāṇ maṭam accam ivaiyē tam
pūṇpāl ākak kāṇpavar nallār, pukaḻ pēṇi
nāṇpāl ōrā naṅkaiyar tampāl naṇukārē;
āṇpālārē peṇpāl ārōṭu aṭaivu; ammā!'