கம்பராமாயணம் 1612 · அயோத்தியா 3.45

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று என்று உன்னும் ; பன்னி இரக்கும் ; இடர் தோயும் ;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் ; 'உயிர் உண்டோ ?
இன்று , இன்று ! ' என்னும் வண்ணம் மயங்கும் ; இடியும் ; பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான் .

பொருள் · Meaning in Tamil

பொலன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது என்ன - மற்றொரு பொன்மலையோடு கூடியது என்னுமாறு; குவி தோளான் - திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று உன்னும் - முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்; பன்னி இரங்கும் - வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும் - துன்ப வெள்ளத்தில் அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத; இன்னல் உழக்கும் - பலவகைத் துன்பங்களால் வருந்துவான்; உயிர் உண்டோ - மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும் வண்ணம் - இல்லை இல்லை என்று கூறும்படி; மயங்கும் - மூர்ச்சையுறுவான்; இடையும் - (நெஞ்சம்) உடைவான்.

தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப் பட்டது. ‘பொன் குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ - இல்பொருள் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thus, thus he broods; he pleads again and again; he sinks in sorrow;
  2. he suffers griefs each unlike the other; so that people say 'Is there life in him?
  3. None, none!', he swoons; he breaks; he whose massed shoulders
  4. were as if one golden mountain had been joined to another.

What the poem says

This verse completes the sentence begun five verses earlier. Tacarataṉ, whose broad shoulders are like two golden mountains set side by side, goes on brooding over these thoughts, pleading, sinking into a flood of grief and suffering every kind of torment.

At times he faints so deeply that anyone would say there was no breath left in him. The image of two golden mountains joined is an imagined comparison, since no such thing exists in nature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eṉṟu uṉṉum; paṉṉi irakkum; iṭar tōyum;
oṉṟu oṉṟu ovvā iṉṉal uḻakkum; 'uyir uṇṭō?
iṉṟu, iṉṟu!' eṉṉum vaṇṇam mayaṅkum; iṭaiyum; poṉ
kuṉṟu oṉṟu oṉṟōṭu oṉṟiyatu eṉṉak kuvi tōḷāṉ.