கம்பராமாயணம் 1613 · அயோத்தியா 3.46

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ் ஆறு அயர்வு எய்திப்
பூழிப் பொன் தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில் ,
`'ஊழில் பொய்த்தால் என் உரை இன்றே உயிர் மாய்வென் ;
பாழிப் பொன் தார் மன்னவ ! '' என்றாள் ; பசையற்றாள் .

பொருள் · Meaning in Tamil

ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால் ஆகிய தேரையுடைய தயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித் தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும் பூழி அடங்க - அழகிய தன் தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் - (தரையில்) உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; “பாழி பொன் தார் மன்னவ - பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த அரசே; ஊழின் பெற்றாம் - முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று உன் வாயால் சொல்; இன்றேல் - அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர் மாய்வென் - நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;” என்றாள்.

இப்பாட்டு, கைகேயியின் கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும் விளி சொன்ன சொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய உன் கடமை ஆகும். அதனைச் செய்க என்னும் கருத்தைக் காட்டுகிறது. ஆழிப் பொன் தேர் மன்னவன் என்பதில் தசரதன் என்பதன் பொருள் அடங்கியிருக்கிறது. பூழி - புழுதி. பசை - ஈரம், இரக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the king of the golden wheeled chariot, thus overcome,
  2. rolled on the ground till his fine shoulders were all covered in dust,
  3. she said: 'Say "You have received them in due order"; if not, I will give up my life,
  4. O king of the mighty golden garland!', she who was without pity.

What the poem says

As the king rolls in the dust, Kaikēyi, with no moisture of pity in her heart, demands that he say in so many words that the boons are duly hers, or she will kill herself.

By addressing him as 'king' she reminds him that keeping one's word and upholding dharma are a ruler's duty. The phrase 'king of the golden wheeled chariot' echoes the meaning of his name, Tacarataṉ, 'he of the ten chariots'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻip poṉ tēr maṉṉavaṉ ivvāṟu ayarvu eyti
pūḻip poṉ tōḷ muṟṟum aṭaṅkap puraḷ pōḻtil,
`'ūḻiṉ peṟṟām eṉṟu urai iṉṟēl uyir māyveṉ;
pāḻip poṉ tār maṉṉava!'' eṉṟāḷ; pacaiyaṟṟāḷ.