கம்பராமாயணம் 1616 · அயோத்தியா 3.49

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூறாமுன்னம் , கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்கத்
தேறான் ஆகிச் செய்கை மறந்தான் ; செயல் முற்றி
ஊறாநின்ற சிந்தையினாளும் துயில்வு உற்றாள் .

பொருள் · Meaning in Tamil

கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று) கூறி முடிப்பதற்குள் முன்னே; கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற; கொலைவாளின் ஏறு ஆம் என்னும் - கொலைத் தொழிலையுடைய வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க; வன் துயர் ஆகத்து இடை மூழ்க - கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி - உணர்வற்றவன் ஆகி; செய்கை மறந்தான் - செயல் மறந்து மயங்கினான்; செயல் முற்றி - (தன் காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற சிந்தையினாளும் - மகிழ்ச்சி ஊறுகின்ற மனமுடைய கைகேயியும்; துயிலுற்றாள் - உறங்கினாள்.

இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்து தூங்கினாள் எனத் துயருற்றார்க்கும் மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது. வாள் ஏறு - வாளின் தாக்குதல், இடியேறு என்பது போல. செயல் முற்றலாவது - தான் வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he had finished speaking, as a grief like the blow
  2. of a murderous sword that cleaves in two sank into his breast,
  3. he lost his senses and forgot all action; and she, her deed accomplished,
  4. her mind welling with joy, fell asleep.

What the poem says

Even before Tacarataṉ has finished saying 'I have given', grief strikes him like a sword blow that splits him in two, and he loses consciousness.

Kaikēyi, having got what she wanted, sinks into contented sleep. The poet sets the two side by side: one lies senseless from sorrow, the other from satisfaction, and outwardly both are in the same state.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟā muṉṉam, kūṟupaṭukkum kolai vāḷiṉ
ēṟu ām eṉṉum vaṉ tuyar ākattiṭai mūḻka
tēṟāṉ ākic ceykai maṟantāṉ; ceyal muṟṟi
ūṟā niṉṟa cintaiyiṉāḷum tuyiluṟṟāḷ.