கம்பராமாயணம் 1618 · அயோத்தியா 3.51

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்தரும் கடை சென்ற யாமம் - எண்ணப்படுகிற யாமங்களில் கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி - கூவுகின்றன வாகிய கோழிகள்; ஏழையால் - அறிவற்றவளான கைகேயியால்; வண்டு தங்கிய தொங்கல் மார்பன் - வண்டுகள் மொய்க்கின்ற மாலையை அணிந்த மார்பினையுடைய தயரதன்; மயங்கி - அறிவு அழிந்து; விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு கலங்கி - மனம் கலங்கி; அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய; காமர் துணைக் கரம்கொண்டு - அழகிய இரு கைகளால்; தம் வயிறு எற்றி எற்றி - தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப போன்றன - அழுவன போன்றிருந்தன.

இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும் கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி. இந்த அணிக்கு, ‘சிறை ஆன காமர் துணைக்கரம்’ என வரும் உருவக அணி அங்கமாய் அமைந்தது. கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை.

ஒப்பு:

தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the last of the counted watches of the night, the cocks that crow,
  2. having seen how, because of the foolish woman, the king whose chest bears a bee-haunted garland
  3. lay dazed and sobbing, were troubled at heart, and with the lovely pair of hands that were their fair wings
  4. seemed to beat their bellies again and again and cry out.

What the poem says

This begins a sequence of sixteen verses describing daybreak in Ayōttī on the morning meant for Irāmaṉ's coronation.

At the last watch of the night the cocks crow and flap their wings, as they always do. The poet pretends that they have seen what Kaikēyi has done to the king and are beating their bellies with their wing-hands in grief. The commentary compares a very similar image in the Naḷaveṇpā, where cocks beat their breasts out of pity for Tamayanti.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ tarum kaṭai ceṉṟa yāmam iyampukiṉṟaṉa-- ēḻaiyāl
vaṇṭu taṅkiya toṅkal mārpaṉ mayaṅki vimmiyavāṟu elām
kaṇṭu, neñcu kalaṅki am ciṟai āṉa kāmartuṇaik karam
koṇṭu tam vayiṟu eṟṟi eṟṟi viḷippa pōṉṟaṉa kōḻiyē.