கம்பராமாயணம் 1621 · அயோத்தியா 3.54

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனைத் திருமாலை , அக்
கரிக் கரம் பொரு கை தலம் அத்து , உயர் காப்பு நாண் அணிதற்குமுன் ,
வரித்த தண் கதிர் முத்து அது ஆகி , இம் மண் அனைத்தும் நிழற்ற , மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தன வானமே .

பொருள் · Meaning in Tamil

சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற; செங்கண் திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இராமபிரானது; கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்; உயர்காப்பு நாண் - சிறந்த மங்கல நாணை; அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே; இம் மண் அனைத்தும் நிழற்ற - இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்; வரித்த தண் கதிர் முத்தது ஆகி - கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என - பிரிக்கப்பட்டது போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது - விண்மீன்களோடு மறைந்தது.

வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும் கொண்டு, காலையில் விண்மீன்கள் மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில் முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார். இது தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன், அதற்குரிய தலைவன் வலங்கையில் காப்புக் கயிறு (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு; வேற்றுமை மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the high protective cord could be tied on the hand, rivalling an elephant's trunk,
  2. of Irāmaṉ, Tirumāl himself, whose red eyes are like laughing lotuses,
  3. the sky hid its stars, as if the canopy spread above,
  4. hung with strings of cool-rayed pearls to shade this whole earth, were being taken down.

What the poem says

Before a royal consecration, the protective thread is tied on the hero's right wrist. Before that can be done for Irāmaṉ, here identified with Vishnu (Tirumāl), the stars fade from the dawn sky.

The poet pictures the sky as a vast festival canopy over the earth, hung with strings of pearls, the stars. At daybreak it looks as if this canopy is being dismantled: the celebration is being taken down before it has begun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciritta paṅkayam otta ceṅ kaṇ irāmaṉait tirumālai, ak
karik karam poru kaittalattu, uyar kāppu nāṇ aṇitaṟkumuṉ,
varitta taṇ katir muttatu āki, immaṇ aṉaittum niḻaṟṟa, mēl
viritta pantar pirittatu ām eṉa mīṉ oḷittatu vāṉamē.