கம்பராமாயணம் 1622 · அயோத்தியா 3.55

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நாம வில் கை இராமனைத் தொழும் நாள் அடைந்தது ; உமக்கு எலாம்
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது ; ' என்பது கற்பியாத்
தாம் ஒலித்தன பேரி ; அவ் ஒலி சாரல் மாரி தழங்கல் ஆ
மா மயில் குலம் என்ன முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே .

பொருள் · Meaning in Tamil

நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும் கோதண்டம் ஏந்திய கையையுடைய இராமனை; தொழும் நாள் அடைந்த நமக்கு எலாம் - வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம் அனைவர்க்கும்; காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத் தோற்றுத் துன்புறுதற்கு இடமான இராப்பொழுது; கழிந்தது - நீங்கியது; என்பது கற்பியா - என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன - முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி - அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால் - மலைப் பக்கங்களில் தங்கிய மேகம்போல முழங்கியதால்; மாமயில் குலம் என்ன - பெரிய மயில்களின் கூட்டம் எழுந்தாற் போல; மாதர் - மகளிர்; முன்னம் மலர்ந்து எழுந்தனர் - தம் கணவர் எழுவதற்கு முன்னே முகம் மலர்ந்து துயிலினின்றும் எழுந்தனர்.

நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if to teach that, for all of us who have reached the day to worship Irāmaṉ of the dread bow in hand,
  2. the night-time, when we yield to the bow of Kāmaṉ, was over,
  3. the great drums sounded; and as that sound thundered like rain on the mountain slopes,
  4. the women rose early, glowing, like a flock of great peacocks.

What the poem says

At dawn the palace drums boom out, as if announcing that the night, the time of love when everyone yields to the sugar-cane bow of Kāmaṉ, the god of desire, is over, and the day has come to honour Irāmaṉ, whose bow strikes fear into his enemies.

Hearing the drums, which sound like thunder on the hills, the women wake before their husbands, glad-faced, like peacocks that rise and dance at the rumble of rain clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāma viṟ kai irāmaṉait toḻum nāḷ aṭainta namakku elām
kāma viṟku uṭai kaṅkul mālai kaḻintatu;' eṉpatu kaṟpiyā
tām olittaṉa pēri; av oli cāral māri taḻaṅkalāl
mā mayil kulam eṉṉa muṉṉam malarntu eḻuntaṉar mātarē.