கம்பராமாயணம் 1623 · அயோத்தியா 3.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சில பூவைமார் - பெண்கள் சிலர்; இன மலர் குலம் வாய் விரித்து - பல்வகையான பூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள மாருதம் வீச - நறுமணம் கலந்த இளங்காற்று வீசுதலினால்; முன் புனை - முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலை சோர - உடையும் மேகலையும் குலைய; நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில கன்னிமார் - மணமாகா மகளிர் சிலர்; மனம் அனுக்கம் விட - நெஞ்சில் உள்ள வருத்தம் தீர; தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்); வள்ளலைப் புணர் - இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன் கனவுக்கு - மிக்க வஞ்சனையையுடைய கனாவிற்கு; இடையூறு அடுக்க - காற்றினால் தடை பொருந்துதலினால்; மயங்கினார் - திகைத்தனர்.
தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாத பெண் காற்றினால் தூக்கம் கலைந்து கனவு நீங்க, உண்மையறிந்து மயங்கினர். விரித்து - விரிய; செய்தென் எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As clusters of flowers of every kind opened their mouths and a young fragrant breeze blew,
- some women, their garments and girdles slipping, burned at heart;
- some maidens, each alone, who in a deceitful dream had embraced the bountiful one, easing the ache in their minds,
- were bewildered when that dream was broken off.
What the poem says
The morning breeze, laden with the scent of opening flowers, stirs the city's women. Some, apart from their husbands, are tormented by desire as the breeze loosens their clothes.
Some unmarried girls had each been dreaming that they were in Irāmaṉ's arms, a dream that eased their longing but was a deceit. The breeze wakes them, and coming back to reality they are left dazed. The scene shows how all Ayōttī, even in its dreams, is centred on Irāmaṉ.