கம்பராமாயணம் 1625 · அயோத்தியா 3.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில் நிறையும்படியும்; ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே; வை அராவிய மாரன் வாளியும் - கூர்மை செய்யப்பட்ட மன்மதன் அம்புகளும்; வான் நிலா நெடு வாடையும் - விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்; மெய் அராவிட - உடலை அறுத்தலால்; ஆவி சோர - உயிர் தளர; வெதும்பும் மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய காதுகளில்; பண் கனிந்து எழுபாடல் - இசை முதிர்ந்து எழுகின்ற பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள் நுழைவனவற்றை ஒத்தன.
கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும் இரவில் வருத்த, காலையில் எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை மிகுவித்துத் துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும் பற்றுள்ளம். ஆசை - உள்ளம் விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும் மேலும் நிகழ்வது. நிலா நெடுவாடை - நிலாவும் நெடிய வாடைக் காற்றும். பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல். ஏ - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While dense passion filled them and longing roared like a blazing fire, and outside
- the sharpened arrows of Māraṉ and the long north wind under the moon in the sky
- cut into their bodies so that their life failed, into the soft ears of those burning women
- the songs that rose, ripe with melody, seemed to enter like hooded snakes.
What the poem says
At dawn the musicians sing the songs that wake the household. For women separated from their husbands, who have spent the night tormented by desire, by the sharp arrows of Māraṉ (the love god), by moonlight and by the cold north wind, these sweet songs only add to their pain.
The melodies enter their ears like hooded cobras. The commentary distinguishes the words used for desire: one is attachment to a person, the other a craving that keeps growing until it is satisfied.