கம்பராமாயணம் 1626 · அயோத்தியா 3.59

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மஞ்சு தோய் புய மஞ்சர் - மேகத்தை யொத்த கைகளையுடைய ஆடவர்; ஆழியான் முடிசூடும் நாள் - சக்கரப்படை ஏந்திய இராம பிரான் மகுடம் சூடிக்கொள்ளும் நாளுக்கு; இடை ஆன - நடுவிலே வந்த; பாவி இது ஓர் இரா - பாவியாகிய இந்த ஓர் இரவு; ஊழி ஆயினவாறு எனா - ஊழிக்காலம் போல நெடிதாய் இருந்தது என்னோ என்று எண்ணியும்; உயர் போதின்மேல் உறை பேதையும் - சிறந்த தாமரைமலரில் தங்கியுள்ள திருமகளும்; ஏழுலோகமும் - ஏழு உலகத்தில் வாழ்வோரும்; எண் தவம் செய்த கண்ணும் - முடி சூட்டுவிழாவைக் காணப் பெருமைக்குரிய தவத்தைப் புரிந்த எங்கள் கண்களும்; எங்கள் மனங்களும் - அத்தகைய எங்கள் நெஞ்சங்களும்; வாழும் நாள் இது எனா - வளர்ச்சியுறும் காலம் இந்நாள் என்று எண்ணியும்; எழுந்தனர் - படுக்கையிலிருந்து எழுந்தனர்.

இராமன் முடிசூடும் விடியலுக்குக் காத்திருந்தமையால், இரவு நீண்டு செல்வதாகத் தோன்றியது. எனவே, ‘பாவி இரா’ என்று பழித்தனர். எனினும், கைகேயி சூழ்ச்சி செய்த இரவாக அது அமைந்து உண்மையிலேயே பாவி இரவாக ஆயிற்று. எண் தவம் செய்த என்னும் அடையினை மனங்களோடும் கூட்டுக. வாழும் நாள் - தாம் தோன்றியதற்குரிய பயனை அடையும் நாள். இரவைப் பாவி என்றது, ‘அழுக்காறு என ஒரு பாவி’ (குறள் 168) என்பது போல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying 'How this one sinful night, standing between us and the day the Lord of the Discus is crowned,
  2. has become as long as an age!', and saying 'The lady who dwells upon the high lotus,
  3. the seven worlds, our eyes that performed great penance, and our hearts,
  4. all come to life on this day!', the men with cloud-touching shoulders rose.

What the poem says

The men of Ayōttī get up eagerly. Waiting for the dawn of Irāmaṉ's coronation, they found the night as long as an age and cursed it as 'sinful'.

They little know how right they are: this really was a sinful night, the night of Kaikēyi's plot. They rise rejoicing that today Tirumakaḷ, goddess of fortune, the seven worlds, and their own eyes and hearts, which must have done great penance to earn this sight, will all find fulfilment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āḻiyāṉ muṭi cūṭum nāḷ, iṭai āṉa pāvi itu ōr irā
ūḻi āyiṉavāṟu!' eṉā, 'uyar pōtiṉmēl uṟai pētaiyum
ēḻu lōkamum eṇ tavam ceyta kaṇṇum, eṅkaḷ maṉaṅkaḷum
vāḻum nāḷ itu!' eṉā, eḻuntaṉar; mañcu tōy puya mañcarē.