கம்பராமாயணம் 1627 · அயோத்தியா 3.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூர்மை கூர் - கூர்மை மிக்க; நெய்உறும் சுடர் வேல் - நெய் பூசப்பட்ட ஒளிபொருந்திய வேல் போன்ற; நெடுங் கண் முகிழ்ந்து - நீண்ட கண்களை மூடிக்கொண்டு; நெஞ்சில் நினைப்பொடும் - மனத்தில் இராமனைப் பற்றிய எண்ணத்தோடு; பொய்உறங்கும் மடந்தைமார் - கள்ளத்துயில் கொண்ட மகளிர்; ஐ உறும் சுடர் மேனியான் - வியப்பைத் தருகின்ற ஒளிவீசும் திருமேனியையுடைய இராமபிரானது; எழில் காண - முடிசூடிய புதிய அழகைக் காண்பதற்கு; மூளும் அவாவினால் - கிளர்ந்தெழுகின்ற ஆசையினால்; கொய் உறும் குல மா மலர்க் குவை நின்று - கொய்யப்பட்ட சிறந்த பெரிய மலர்த்தொகுதியினால் செய்யப்பட்ட படுக்கையிலிருந்து; குழல்வண்டு பொம்என விம்ம - இசைப்பாட்டையுடைய வண்டுகள் பொம்மென்று ஆளத்தி வைக்க; எழுந்தனர்.
‘நாம விற்கை’ (1545) என்று தொடங்கும் பாடல் தத்தம் கணவரோடு கூடியிருந்த பெண்கள் விழித்ததைத் தெரிவிப்பது; இப்பாடல் கன்னிப்பெண்கள் விழித்தெழுந்ததைக் கூறுவது. இராமனது முடிசூட்டு விழாவைக் காணும் ஆசை நெஞ்சில் மூண்டெழுவதால் உறக்கம் வராதிருக்கவும் கண்மூடிக் கிடந்தனர் ஆதலின் அது ‘பொய் உறக்கம்’ ஆயிற்று. எழில் - மேலும் மேலும் வளர்ந்து சிறக்கும் அழகு. குவை - ஆகுபெயராய் மலர்களால் ஆகிய படுக்கையை உணர்த்திற்று. குழல் வண்டு - குழல்போல இசைபாடும் வண்டு. ‘பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது, தன்பால் தழுவும் குழல்வண்டு, தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே’ (3736) என்னும் இடத்தும் இப்பொருளில் வருதல் காணலாம். பொம்மென - ஒலிக்குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the heaps of fine, freshly gathered flowers they rose, in the burning desire to see the beauty
- of him whose radiant form inspires wonder, the young women who had closed
- their long eyes, sharp as gleaming oiled spears, and only feigned sleep with him in their hearts,
- while the flute-voiced bees hummed loudly in their hair.
What the poem says
An earlier verse showed married women waking; this one shows the unmarried girls. They had lain on beds of flowers with their spear-sharp eyes closed, but only pretending to sleep, too excited by the thought of seeing Irāmaṉ in the new beauty of his crowning to drift off.
Now they rise eagerly, while the bees in their flower-decked hair hum like flutes. Kampaṉ uses the same 'flute-like bee' elsewhere, of bees singing Tamil songs in lotuses.