கம்பராமாயணம் 1628 · அயோத்தியா 3.61

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் - மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன் மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி - (கணவன்மார் தம் மார்பில் அணிந்த) பொன்மாலையோடு தழுவுவதற்கு (மகளிர் மார்பில்) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு; அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு; ஏடு அகம் பொதி தார் புனைந்திட - பூக்களால் கட்டிய மாலையை அணிந்துகொள்ள; யாம பேரி இசைத்தலால் - அப்பொழுது கடையாமம் கழிந்ததை அறிவிக்கும் முரசம் ஒலித்தலால்; நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின் ஊடலால் வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி; கூடல் கண்டிலர் - கூடி மகிழ்தலைப் பெற்றாரில்லை.

மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம் கழிந்ததால் அம்மகளிர் கூடல் பெறாமல் பிரிந்தனர். ஊடல் - கணவனும் மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது, கணவனிடத்துப் புலத்தற்கும் காரணம் இல்லாமல் இருந்தும், மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டு மனைவி மனம் மாறுபட்டு நிற்றல். மைந்தர் உய்யக் கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because, while the husbands, fearing again and again that their golden ornaments would bruise in the embrace, in their confusion
  2. were putting on garlands made of petals, the drum of the night watch sounded,
  3. the women adorned with fine garlands, firm in their resolve,
  4. who had begun a lovers' quarrel, never reached reconciliation, so that the pining men might find relief.

What the poem says

The dawn also interrupts the lovers' quarrels of the night. Some wives had feigned anger with their husbands out of sheer love, as wives do in Tamil love poetry even when there is no real cause.

While the anxious husbands were exchanging their hard gold ornaments for soft flower garlands, so as not to hurt their wives in an embrace, the drum announced the end of the last watch. Night was over before any reconciliation, and the couples parted, the men still pining and the women no happier.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭakam taru pūṇ muyaṅkiṭa añci añci aṉantarāl
ēṭu akam poti tār poruntiṭa, yāma pēri icaittalāl,
cēṭakam puṉai kōtai maṅkaiyar, cintaiyil ceṟi tiṇmaiyāl,
ūṭal kaṇṭavar kūṭal kaṇṭilar, naiyum maintarkaḷ uyyavē.