கம்பராமாயணம் 1630 · அயோத்தியா 3.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்; ஆர் உயிரோடு கூட வழங்கும் அம் மெய்யன் - தன் அரிய உயிருடனே சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் - வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்; மா மகன்மேல் விளைந்தது ஓர் காதலால் - தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த; நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்க - சிறந்த ஐந்து புலன்களும் கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான் தெய்வமேனி படைத்த - நடுங்குகின்றவனாகிய தயரதனது தெய்வத்தன்மை பொருந்திய உடலில் இருந்த; சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல மெல்ல மழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது விடிவதால்) ஒளி குறைந்தன.
தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன. மா மகன் - மூத்த மகன், ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக் கொள்ளப்படுதலின், அவன் மேனி ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும் காலம் அடுத்தபோது, புலன்கள் கலங்கி ஒடுங்குதலும், உடம்பின் ஒளி குன்றுதலும் நிகழ்வனவாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the glow of the divine body of the man of truth, who would give away the seven worlds and seven more
- together with his precious life, the hero among heroes, who, through his love for his great son,
- failing and failing, his five good senses quenched and sunk, lay trembling,
- the lamps grew dim.
What the poem says
As day breaks, the lamps that burned all night grow pale. The poet links this to Tacarataṉ: the king, so true to his word that he would give away all fourteen worlds and his life with them, lies trembling with his senses failing, out of love for his eldest son.
The fading of the lamps mirrors the fading of the radiance of his body, which is called divine because a righteous king was regarded as a form of Vishnu. Dimming senses and the loss of bodily lustre are signs that death is near.