கம்பராமாயணம் 1631 · அயோத்தியா 3.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின - தேன்போலும் இனிய இசையை ஒலித்தன; வாணி முந்தின பாணியின் பங்கி - சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும் விம்மின - வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும் வாத்தியங்கள் பேரொலி செய்தன; பல்வகை - பலவகையான; பொங்கு இயம் பலவும் - மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க, வெண்சங்கு இயம்பின - வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன; கொம்பு அலம்பின - ஊது கொம்புகள் ஒலித்தன; சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின.
அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள் குறிக்கப்பட்டன. கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள் பலவகை. நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்று பொருள் கொண்டதற்கு ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன என்று பொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many flutes poured out honey; the kinds of song in which the words lead
- swelled through all the sky; the pampai drums thundered; many kinds
- of surging instruments resounded; as anklets jingled, white
- conch bangles chimed; horns blared; and the chant of the Sāma Veda spread everywhere.
What the poem says
Another catalogue of the morning sounds of Ayōttī: sweet flutes, songs filling the air, the boom of pampai drums and other instruments beaten, struck and blown, the blare of horns and the chanting of Sāma Vedic hymns.
The commentary reads the 'anklets' as women's ankle-bells, and so takes the 'white conches' as the conch-shell bangles on women's wrists, chiming along with them.