கம்பராமாயணம் 1633 · அயோத்தியா 3.66

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூவராய் முதலாகி மூலமது ஆகி ஞாலமும் ஆகும் அத்
தேவதேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் , சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே .

பொருள் · Meaning in Tamil

மூவர் ஆய் - அயன், அரி, அரன் என்னும் மூன்று மூர்த்திகளாக; முதல் ஆகி - அம்மூவர்க்குள்ளும் திருமாலாகிய முதல்வனாகி; மூலம் அது ஆகி - இவையெல்லாவற்றிற்கும் அடியாய் ஆகி; ஞாலமும் ஆகி - உலகத்துள்ள எல்லாப் பொருள்களும் தானே ஆகி; அத்தேவதேவர் பிடித்த போர் வில் - அந்த மகாதேவராகிய சிவபெருமான் பிடித்த போரிற்குரிய வில்லை; ஒடித்த சேவகன் - (சீதையை மணத்தற்காக) ஒடித்த வீரன் ஆகிய இராமபிரான்; சேண் நிலம் காவல் - பெரிய மண் முழுதும் காத்தற்குரிய; மாமுடி சூடு பேர் எழில் - சிறந்த மகுடத்தைச் சூட்டிக்கொள்ளும் பேரழகை; காணலாம் எனும் ஆசை கூர் - பார்க்கலாம் என்னும் ஆவல் மிகுந்த; பாவைமார் முகம் என்ன - பெண்களின் முகங்கள்போல; பங்கயராசி முன்னம் மலர்ந்த - தாமரைப் பூக்களின் கூட்டம் முந்தி மலர்ந்தன.

தாமரையைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வதே வழக்கம். இங்குப் பெண்களின் முகம்போலத் தாமரை மலர்ந்தன என்றார். இது எதிர் நிலை உவமை அணி.

“முதலாவார் மூவரே; அம்மூவர் உள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்”

என்பது பொய்கையாரின் முதல் திருவந்தாதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who became the Three, and the First, and the Root, and the world as well,
  2. the warrior who broke the battle bow held by the God of gods: in the longing to see
  3. the great beauty of his crowning with the high crown that guards the wide earth,
  4. the masses of lotuses bloomed early, like the faces of young women.

What the poem says

At sunrise the lotuses open. The poet compares them to the faces of the city's women, lit up with longing to see Irāmaṉ crowned. This reverses the usual comparison, in which a woman's face is likened to a lotus.

Irāmaṉ is described in theological terms: he is the three gods Brahmā, Vishnu and Śiva, yet first among them, the root of all and the world itself. The commentary cites the Vaishnava saint Poykai Āḻvār, who says Vishnu is the first of the three. Irāmaṉ is also the hero who broke Śiva's mighty bow to win Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūvar āy mutal āki mūlam atu āki ñālamum ākiya
tēva tēvar piṭitta pōr vil oṭitta cēvakaṉ, cēṇ nilam
kāval mā muṭi cūṭu pēr eḻil kāṇalām eṉum ācai kūr
pāvaimār mukam eṉṉa muṉṉam malarnta paṅkaya rāciyē.