கம்பராமாயணம் 1638 · அயோத்தியா 3.71

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர ,
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே ,
குமிழ் முலைச் சீதை கொண்கன் கோ முடி புனைதல் காண்பான்
அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் அரசர் வெள்ளம் .

பொருள் · Meaning in Tamil

அரச வெள்ளம் - அரசர்களின் பெருந்திரள்; குமிழ் முலைச் சீதை கொண்கன் - குவிந்த நகில்களையுடைய சீதைக்குக் கணவனாகிய இராமபிரான்; கோமுடி புனைதல் காண்பான் - அரசுக்குரிய மகுடம் சூட்டிக்கொள்ளுவதைக் காண்பதற்கு; உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட - (உள்ளே நிறைந்து) புறம்பே வெளிப்படுவது போன்று மிகுகின்ற விருப்பம் தம்மைத் தூண்ட; அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் - அமுதத்தை உண்பதற்கு ஆவலோடு திரண்ட தேவர்களைப் போல; இமிழ்திரைப் பரவை ஞாலம் - ஒலிக்கும் அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகம்; எங்கணும் வறுமை கூர - எல்லா இடத்தும் வெறுமையடையும்படி; வந்தது - வந்து கூடிற்று.

அரசர் கூட்டத்திற்குத் தேவர் கூட்டத்தை உவமை கூறினார். உவமை அணி. பரவை - பரவி இருப்பது; ஐ - வினைமுதல் விகுதி. அன்று, ஏ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the world girdled by the roaring sea grew empty everywhere,
  2. driven by a longing that seemed to spill out of them, there came
  3. to see the husband of Cītai of the rounded breasts put on the royal crown
  4. a flood of kings, like the gods crowding together to drink the nectar.

What the poem says

Kings from all over the sea-girt world pour into Ayōttī to see Irāmaṉ crowned, in such numbers that the rest of the earth seems emptied of rulers.

Their eagerness overflows like something spilling out of them, and they throng together like the gods who gathered to drink the nectar of immortality churned from the ocean of milk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1imiḻ tiraip paravai ñālam eṅkaṇum vaṟumai kūra,
umiḻvatu ottu utavu kātal untiṭa vantatu aṉṟē,
kumiḻ mulaic cītai koṇkaṉ kōmuṭi puṉaital kāṇpāṉ
amiḻtu uṇak kuḻumukiṉṟa amarariṉ araca veḷḷam.