கம்பராமாயணம் 1640 · அயோத்தியா 3.73

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வேந்தரே பெரிது ' என்பாரும் , 'வீரரே பெரிது ' என்பாரும் ,
'மாந்தரே பெரிது ' என்பாரும் , 'மகளிரே பெரிது ' என்பாரும் ,
'போந்ததே பெரிது ' என்பாரும் , 'புகுவதே பெரிது ' என்பாரும் ,
தேர்ந்ததே தேரின் அல்லால் , யாவரே தெரியக் கண்டார் ?

பொருள் · Meaning in Tamil

வேந்தரே பெரிது என்பாரும் - (அந்தக் கூட்டத்தில்) அரசர்களின் தொகுதியே மிகுதி என்பவரும்; வேதியர் பெரிது என்பாரும் - மறையவர் தொகுதியே மிகுதி என்பவரும்; மாந்தரே பெரிது என்பாரும் - ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்; மகளிரே பெரிது என்பாரும் - பெண்டிர் தொகுதியே மிகுதி என்பவரும்; போந்ததே பெரிது என்பாரும் - வந்து சேர்ந்தவர் கூட்டமே மிகுதி என்பவரும்; புகுவதே பெரிது என்பாரும் - வரப்போகும் கூட்டமே மிகுதியாக இருக்கும் என்பவரும் ஆக; தேர்ந்ததே தேரின் அல்லால் - தாம் அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார் - எவர்தாம் முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லை என்றபடி).

இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய் இருந்தது என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர் தொகுதிக்கு ஆகிவந்தனர்; ஆகுபெயர். பெரிது என்னும் ஒன்றன்பால் வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க் குறித்தமையின் மாந்தர் என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும் கூட்டியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some said 'The kings are the most'; some said 'The Brahmins are the most';
  2. some said 'The men are the most'; some said 'The women are the most';
  3. some said 'Those who have come are the most'; some said 'Those still coming are the most';
  4. each knew only what he had made out; who could see it clearly whole?

What the poem says

People in the crowd argue over which group is largest: the kings, the Brahmins, the men, the women, those already arrived, or those still pouring in.

Each judges only by the part he can see, and no one can take in the whole. The point is that every group is beyond counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēntarē peritu' eṉpārum, 'vētiyar peritu' eṉpārum,
'māntarē peritu' eṉpārum, 'makaḷirē peritu' eṉpārum,
'pōntatē peritu' eṉpārum, 'pukuvatē peritu' eṉpārum,
tērntatē tēriṉ allāl, yāvarē teriyak kaṇṭār?