கம்பராமாயணம் 1641 · அயோத்தியா 3.74

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குவளையின் எழிலும் - கருங்குவளை மலரின் அழகையும்; வேலின் கொடுமையும் - வேற்படையின் கொலைத் தன்மையையும்; குழைத்துக் கூட்டி - ஒன்றாய்க் கலந்து சேர்த்து; திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த - விளங்குகின்ற மை என்று பெயர் பொருந்திய; நஞ்சினைத் தெரியத் தீட்டி - விடத்தை விளங்கப் பூசி; தவள ஒண்மதியுள் வைத்த தன்மை சால் - வெள்ளிய ஒளிமிக்க சந்திரனிடத்தில் வைத்தாற்போன்ற தன்மை அமைந்த; தடங் கண் நல்லார் - பெரிய கண்களையுடைய அழகியவரும்; துவளும் நுண் இடையார் - துவளுகின்ற மெல்லிய இடையினையுடையவரும் ஆகிய மகளிர்; ஆடும் தோகைஅம் குழாத்தின் - நடனமாடும் அழகிய மயிற்கூட்டம் போல; தொக்கார் - வந்துகூடினர்.

குவளையின் அழகையும் வேலின் கொடுமையையும் சேர்த்து, மையாகிய நஞ்சினைப் பூசி, மதியுள் வைத்தன போலும் கண்கள் என்பது இல்பொருள் உவமை. ‘அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சு’ என்பது உருவகம். தோகை - ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Blending and mixing the beauty of the blue lily with the cruelty of the spear,
  2. painting on clearly the poison that goes by the name of shining collyrium,
  3. the lovely women, with large eyes such as might be set within the bright white moon,
  4. their slender waists swaying, gathered like a flock of dancing peacocks.

What the poem says

The women gather in the crowd like a flock of dancing peacocks. Their eyes combine the loveliness of the blue water-lily with the deadliness of a spear, and are rimmed with kohl that is really poison.

Set in their moon-like faces, these eyes are as if placed inside the bright moon itself, an imagined comparison of a kind that does not exist in nature. Calling the kohl poison is a metaphor the poet has used before.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuvaḷaiyiṉ eḻilum vēliṉ koṭumaiyum kuḻaittuk kūṭṭi,
tivaḷum añcaṉam eṉṟu ēynta nañciṉait teriyat tīṭṭi,
tavaḷa oṇ matiyuḷ vaitta taṉmai cāl taṭaṅ kaṇ nallār,
tuvaḷum nuṇ iṭaiyār āṭum tōkai am kuḻāttiṉ tokkār.