கம்பராமாயணம் 1643 · அயோத்தியா 3.76

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திரற்கு உவமை சாலும் - தேவேந்திரனுக்கு உவமையாகத் தக்க; இரு நிலக்கிழவர் எல்லாம் - பெரிய நாடுகளுக்குத் தலைவர்களான அரசர்கள் எல்லாரும்; சந்திரர் கோடி என்ன - சந்திரர் எண்ணற்றோர் என்னும்படி; தரள வெண் கவிகை ஓங்க - முத்துகளால் ஆகிய வெள்ளிய குடைகள் மேலோங்கவும்; அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தென - வானில் அன்னப்பறவைகள் எல்லாம் நிறைந்தன என்னும்படி; கவரி துன்ன - வெண்சாமரங்கள் நெருங்கவும்; வந்தனர் - வந்து; மௌலி சூட்டும் மண்டபம் - இராமபிரான் முடிபுனைதற்குரிய மண்டபத்துள்; மரபின் புக்கார் - முறைப்படி புகுந்தனர்.

மன்னர்கள் தம் வரிசையோடு மண்டபத்தில் முறைப்படி புகுந்தனர் என்பது கருத்து. இன்பத்துய்ப்பில் இந்திரனுக்கு மேலானவர் என்பார், ‘இந்திரற்கு உவமை சாலும்’ என்றார். வெண்சாமரைகள் அசைவு, நிறம் ஆகியவற்றால் அன்னம் போல்வன. வந்தனர் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With white pearl umbrellas raised high like a myriad moons,
  2. with yak-tail whisks crowding as if all the swans of the sky had gathered,
  3. all the lords of the wide earth, fit to be compared with Intiraṉ,
  4. came, and in due order entered the hall where the crown is to be placed.

What the poem says

The assembled kings, each as splendid as Intiraṉ, king of the gods, enter the coronation hall in proper order of rank.

Above them their white pearl-hung umbrellas look like countless moons, and the white yak-tail fly-whisks waving around them, white and fluttering, look like a sky full of swans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantirar kōṭi eṉṉat taraḷa veṇ kavikai ōṅka,
antarattu aṉṉam ellām ārnteṉak kavari tuṉṉa,
intiraṟku uvamai cālum irunilak kiḻavar ellām
vantaṉar, mauli cūṭṭum maṇṭapam marapiṉ pukkār.