கம்பராமாயணம் 1645 · அயோத்தியா 3.78

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்ணவர் விசும்பு தூர்த்தார் - (அவ் விழாவைக் காண வந்த) வானவர் ஆகாயத்தை நிரப்பினர்; விரிதிரை உடுத்த கோல மண்ணவர் - பரந்த கடலை ஆடையாக உடுத்த அழகிய பூமியில் உறைவோர்; திசைகள் தூர்த்தார் - எட்டுத் திக்குகளையும் நிரப்பினர்; மங்கலம் இசைக்கும் சங்கம் ஓதை - மங்களகரமாக ஒலிக்கும் சங்குகளினுடைய ஒலியும்; கண் அகல் முரசின் ஓதை - அகன்ற கண்ணையுடைய முரசவாத்தியங்களினுடைய ஒலியும்; கண்டவர் செவிகள் தூர்த்த - விழாக்காண வந்தவர் செவிகளை நிரப்பின; எண் அருங் கனக மாரி - தானமாகத் தரப்பட்ட அளவிடற்கு அரிய பொன்மழை; எழுதிரைக் கடல்கள் தூர்த்த - அலைகளையுடைய ஏழு கடல்களையும் நிரப்பின.

மண்டபத்துள் சங்க நாதமும், முரசின் ஒலியும் செவிகளை நிறைக்க, பொன்மழை பொழியப்பட்டது. செவிகள் தூர்த்த என்னும் பலவின்பால் வினைமுற்றுக்கேற்ப, ஓதை என்பதைப் பிரித்துச் சங்கத்தோடும் முரசோடும் கூட்டிச் சங்கின் ஓசையும் முரசின் ஓசையும் தூர்த்தன எனப் பொருள் கொள்க. தூர்த்தல் என்பது பலமுறை ஒரே பொருளில் வந்தது. சொற்பொருட் பின்வரு நிலை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods filled up the sky; the people of the lovely earth, which wears the spreading waves as its garment,
  2. filled up the quarters; the conches that sound auspicious notes
  3. and the roar of the wide-faced drums filled up the ears of those who saw;
  4. the countless shower of gold filled up the seven seas with their waves.

What the poem says

The coronation day is pictured as filling everything: the gods crowd the sky, the people of the earth crowd every direction, the sound of conches and drums fills every ear, and gold given away in gifts pours out in such a flood that it fills the seven oceans.

The verb 'filled up' is repeated with the same meaning in each clause, a figure of repetition the commentary names.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇavar vicumpu tūrttār viritirai uṭutta kōla
maṇṇavar ticaikaḷ tūrttār; maṅkalam icaikkum caṅkam,
kaṇ akal muraciṉ ōtai, kaṇṭavar cevikaḷ tūrtta;
eṇ aruṅ kaṉaka māri eḻu tiraik kaṭalkaḷ tūrtta.