கம்பராமாயணம் 1646 · அயோத்தியா 3.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்னர் மின் ஒளி - மன்னர்களின் உடம்பின் ஒளிக்கதிர்கள்; விளக்கு ஒளி மறைத்த - விளக்கின் ஒளியை மறையச் செய்தன; மகுட கோடி துளக்கு ஒளி - மகுடங்களின் தொகுதிகள் அசைதலால் உண்டாகும் ஒளிக்கற்றைகள்; விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த - வானத்தில் செல்லும் சூரியனையும் மறைத்தன; சூழ்ந்த அளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் - பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப் போன்ற பற்களையும் புன்னகையையும் உடைய பெண்களுடைய; அணியின் சோதி - ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்; வளைக்கலாம் என்று - தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ் வானோர் கண்ணையும் - அந்தத் தேவர்களின் கண்களையும்; மறைத்த - மறைத்தன.
கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால் வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை ஒளிக்கதிர்கள் என்று பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை மயக்கமாகும். அன்று, ஏ - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lightning radiance of the kings hid the light of the lamps; the flickering light
- of their myriad crowns hid even the sun that travels the sky; and the splendour of the jewels
- of women whose smiles show teeth like pearls from the encircling ocean,
- as if thinking it could take heaven captive, dazzled even the eyes of the gods.
What the poem says
Light overwhelms light in the coronation hall. The radiance of the kings' bodies outshines the lamps; the glitter of their countless crowns eclipses the sun itself.
The brilliance of the women's jewels, as they smile with teeth like ocean pearls, is so great it seems bent on conquering heaven too, and dazzles even the gods who are watching from the sky.