கம்பராமாயணம் 1648 · அயோத்தியா 3.81

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கங்கையே முதல ஆய கன்னி ஈறு ஆன தீர்த்த
மங்கலப் புனலும் , நாலு வாரியின் நீரும் , பூரித்து ,
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து , வீரச்
சிங்க ஆதனமும் வைத்துச் , செய்வன பிறவும் செய்தான் .

பொருள் · Meaning in Tamil

கங்கை முதல் ஆய - கங்கையாறு முதலாக; கன்னி ஈறு ஆன - குமரியாறு ஈறாக உள்ள; தீர்த்த மங்கலப் புனலும் - புண்ணிய தீர்த்தங்களின் மங்களகரமான நீரையும்; நாலு வாரியின் நீரும் - நான்கு கடல்களின் நீரையும்; பூரித்து - குடங்களில் நிறைத்துவைத்து; அங்கியின் வினையிற்கு - அக்கினியில் செய்யவேண்டும் ஓமம் முதலிய சடங்குகளுக்கு; ஏற்ற யாவையும் அமைத்து - பொருந்திய எல்லாவற்றையும் தக்கவாறு செய்து; வீரச் சிங்க ஆதனமும் வைத்து - வீர சிம்மாசனத்தையும் உரிய இடத்தில் அமைத்து; செய்வன பிறவும் செய்தான் - மேலும் செய்ய வேண்டுவனவற்றையும் செய்தான்.

வசிட்ட முனிவன் ஓமத்திற்கும் நீராட்டத்திற்கும் வேண்டுவன எல்லாவற்றையும் அமைத்துவைத்தான். அங்கியின் வினை - ஓமம்; அதற்குரியன அட்சதை, தருப்பை, சமித்து, நெய், அகப்பை முதலியன. ‘பிறவும்’ என்பது ஓமத்திற்குரிய புரோகிதர் முதலாயினோரை வரித்தல், அங்குரார்ப்பணம், சுமங்கலி அமைத்தல், யானை, குதிரை, அத்திமரத்தால் செய்த பீடம் முதலியவற்றைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Filling vessels with the auspicious water of the sacred bathing places, from the Gaṅgā first
  2. to the Kaṉṉi last, and with the water of the four seas,
  3. setting out everything fit for the rites of the sacred fire, and placing
  4. the heroic lion throne, he did all else that was to be done.

What the poem says

Vacishṭar makes ready for the ceremony. He fills pots with holy water from every sacred river, from the Gaṅgā in the north to the Kaṉṉi (Kanyakumari) in the far south, and with water from the four oceans, for the ritual bath of consecration.

He sets out everything needed for the fire offering, such as rice, sacred grass, kindling, ghee and ladles, places the lion throne, and sees to the other preparations: appointing the priests, the sprouting of seeds, the attendance of married women, and the elephant, the horse and the seat of fig-wood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkaiyē mutala āya kaṉṉi īṟu āṉa tīrtta
maṅkalap puṉalum, nālu vāriyiṉ nīrum, pūrittu,
aṅkiyiṉ viṉaiyiṟku ēṟṟa yāvaiyum amaittu, vīrac
ciṅka ācaṉamum vaittu, ceyvaṉa piṟavum ceytāṉ.