கம்பராமாயணம் 1649 · அயோத்தியா 3.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கணித நூல் உணர்ந்த மாந்தர் - சோதிட நூலில் துறைபோய சோதிடர்கள்; “காலம் வந்து அடுத்தது - முகூர்த்த நேரம் வந்து நெருங்கியது;” என்ன - என்று தெரிவித்ததனால்; பிணி அற நோற்று நின்ற பெரியவன் - பிறவிநோய் நீங்கும்படி தவஞ்செய்து அந்நிலையில் வழுவாமல் நின்ற வசிட்ட முனிவன்; விரைவின் ஏகி - வேகமாகச் சென்று; மணிமுடி வேந்தன் தன்னை - இரத்தினக் கிரீடம் அணிந்த சக்கரவர்த்தியை; வல்லையின் கொணர்தி - விரைவில் இங்குக் கொண்டு வருவாய்; என்ன - என்று பணிக்க; பணி தலைநின்ற காதல் சுமந்திரன் - அம்முனிவனது கட்டளையைத் தலைமேற் கொண்டு நின்ற அன்பு நிறைந்த சுமந்திரன்; பரிவின் சென்றான் - அன்போடு விரைந்து சென்றான்.
வசிட்ட முனிவனுடைய தகுதிகளை நோக்கிப் ‘பெரியவன்’ என்றார். நோற்றலினும் அந்நெறி வழுவாது நிற்றல் அருமைத்தாதலின் ‘நோற்று நின்ற’ என்றார். ‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து இருந்த’ என்பதில் (சிலப்பதிகாரம் - 1) ‘இருந்த’ என்பது போன்றது ‘நின்ற’ என்னும் இது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the men learned in the science of reckoning said 'The hour has come',
- the great one who stood firm in the penance that ends all affliction said: 'Go swiftly
- and bring here quickly the king of the jewelled crown',
- and Cumantiraṉ, whose love held that command above his head, went eagerly.
What the poem says
The astrologers announce that the auspicious moment has arrived. Vacishṭar, who has kept steadfast in austerities that free one from rebirth, tells Cumantiraṉ, the king's loyal minister and charioteer, to hurry and fetch Tacarataṉ.
Cumantiraṉ, devoted to the king, sets off at once. Neither of them knows what has happened during the night.