கம்பராமாயணம் 1650 · அயோத்தியா 3.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்தொட நிவந்த கோயில் - வானை அளாவி உயர்ந்து நின்ற அரண்மனையில்; வேந்தர்தம் வேந்தன் தன்னை - அரசர்களுக்கு அரசனாகிய தயரதனை; கண்டிலன் - காணாதவனாகி; வினவ - (அங்குள்ளாரைக்) கேட்க; கேட்டான் - (அவர்கள் சொல்லக்) கேட்டு; கைகயள் கோயில் நண்ணி - கைகேயியின் அரண்மனையை அடைந்து; தொண்டைவாய் மடந்தைமாரின் சொல்ல - கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடைய தாதியரிடத்தில் தன் வருகையைத் தெரிவிக்க; அவரும் சொல்ல - அத்தாதியரும் கைகேயியிடத்துத் தெரிவிக்க; பெண்டிரில் கூற்றம் அன்னாள் - மகளிருள் யமனைப்போன்ற அவள்; “பிள்ளையைக் கொணர்க - இராமனை அழைத்து வருக,” என்றாள் - என்று சுமந்திரனை நோக்கிக் கூறினாள்.
தயரதன், கைகேயியின் அரண்மனையில் இருத்தலைக் கேட்டுச் சுமந்திரன் அங்கே செல்ல, அவன் சக்கரவர்த்தியைக் காண்பதற்கு முன்னே கைகேயி அவனைப் பார்த்து இராமனை அழைத்துவரப் பணிந்தாள். கணவனைக் கொல்லத் துணிந்த வாளாதலின், ‘கூற்றம் அன்னாள்’ என்றார். கண்டிலன், கேட்டான் - முற்றெச்சங்கள். மற்று - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not finding the king of kings in his palace that rose to touch the sky, he asked and was told,
- and came to Kaikēyi's palace; when he told the maids with lips like the red tonṭai fruit,
- and they in turn told her, she who among women was like Death
- said: 'Bring the boy!'
What the poem says
Not finding Tacarataṉ in his own palace, Cumantiraṉ is told that the king is with Kaikēyi. He goes there and sends word in through her maids.
Before he can see the king, Kaikēyi herself sends back the order: 'Bring the boy', meaning Irāmaṉ. The poet calls her Death in a woman's form, since she has resolved on what will kill her husband.